Shadow

மீண்டும் கஜாலா!

கஜாலா

படிக்கப் போயிருந்த கஜாலா மீண்டும் திரைத்துறைக்கு வந்துள்ளார்.

“100 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்டுள்ள நாட்டில், கவனிக்கப்படாமல் போக வாய்ப்பு மிக அதிகம். ஆனால் சினிமா எனும் க்ரியேட்டிவ் ஃபீல்டில், நமது திறமையைக் காட்டிப் புகழடையலாம். அப்படி ஆசிர்வதிக்கப்பட்ட நட்சத்திரங்களில் நானுமொருத்தி.

நதியா, ரேவதி, ஷாலினி ஆகியோர்தான் என் இன்ஸ்பிரேஷன். இனி தமிழ்த்திரைப்படங்களில் கவனம் செலுத்தி, எனக்கான ஓரிடத்தைப் பிடிப்பதுதான் என் நோக்கம்” என்றார் கஜாலா.

மீண்டும் ராம் படத்து ‘கார்த்திகாயினி மலைச்சாமி’ போன்ற பெயர்சொல்லும் கதாபாத்திரங்களில் சிறக்க வாழ்த்துக்கள்!