SPI சினிமாஸ் நிறுவனம் வழங்கும் லக்ஸ், ஒரு மாறுபட்ட, நவீனமான மற்றும் உள்ளம் கவர்கின்ற சினிமா அனுபவத்தை வழங்குவதற்காக அனைத்துப் பாரம்பரிய வழக்கங்களைத் தகர்த்தெறிகிற ஒரு புதிய சினிமா அமைவிடமாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஃபீனிக்ஸ் மாலில் 11 திரைகள் கொண்ட 4K டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய SPI சினிமாஸின் லக்ஸ் தியேட்டர் திறக்கப்பாட்டுள்ளது. இதில் உணவகம், கஃபே, ரீடெய்ல் ஸ்டோர், ஸ்பா, விளையாட்டு இடம் என பல நவீன வசதிகள் கொண்டுள்ளன. இது படைப்புத்திறன, நவீன ஸ்டைல், வசதி, தரம் என அனைத்தையும் கொண்டு நவீன தொழில்நுட்பத்தில் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்கூடம்
லக்ஸ் கதவைத் திறந்தவுடனே காற்றோட்டம் கொண்ட இடம், இத்தாலி நாட்டு மார்பிள், வெல்வெட் போன்ற சுவர், கிரிஸ்டல் விளக்குகள், அழகிய வடிவங்கள் பதிக்கப்பட்ட கண்ணாடிப் பரப்புடன் பார்வையாளர்களை வரவேற்கிறது.
முன்கூட்டத்தில் உணவகம் உள்ளது. முன்கூட்டத்தின் மையப் பகுதியில் 72 LCDகள் கொண்ட வீடியோ தூண் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.
முன்கூடத்தின் வலதுகை பக்க மூலையில் சற்று உயரமான மேடையில் பெரிய பியானோ ஒன்று வைக்கப்பட்டுள்ளது. ஆட்டோமேட்டட் ஐபாட் உடன் இணைக்கப்பட்ட இதனிலிருந்து எல்லாக் காலத்து பிரபலமான இசையமைப்பாளர்களின் ரம்மியான பாடல்களைக் கேட்டு அன்பவிக்கலாம்.
முன்கூடத்தில் வாஷ்ரூம்கள், ஒன்று பெண்களுக்கு, இரண்டு அஅண்களுக்கு மற்றும் வெவ்வேறு இடங்களில் மேற்கத்திய செட்கள் என வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பெண்களுக்கு என பிரத்தியேகமாக ஏழு வாஷ்ரூம்கள், பென்ஹாலிகஸ் பொருட்களைக் கொண்டு வசதியாக அமைக்கப்பட்டுள்ளன.
திரைகள்
லக்ஸில் மொத்தம் 2688 இருக்கைகள் கொண்ட 11 அதிநவீன திரைகள் உள்ளன. ஒவ்வொரு திரையும் வசதியான இருக்கைகள், அழகிய அலங்காரம் மற்றும் ஒளியமைப்பு வசதி என அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியவாறு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு திரைக்கும் இறக்குமதி செய்யப்பட்ட தனித்தனி துணிவகைகளைக் கொண்டு வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டிசைனர் வினைல் இருக்கைகளும், வித்தியாசமான வண்ணங்களும் கலந்திருப்பது ஓர் உணர்வுபூர்வமான சுற்றுச்சூழலை ஏற்படுத்துகிறது.
திரைகளில் 3D தொழில்நுட்பத்துடன் கூடிய RDX-4K டிஜிட்டல் புரொஜக்டர்கள், 2.4Gain Silver Screens மற்றும் டிஜிட்டல் ஆடியோ என நவீன கேளிக்கை தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம்
ஆர்டிஎக்ஸ் 4K மற்றும் ஆர்டிஎக்ஸ் 3D
எங்களுடைய எல்லா சினிமா திரையரங்குகளிலும் உள்ளது போல் லக்ஸிலும் 4K (RDX-4K)இல் உண்மையான டிஜிட்டல் அனுபவம் வழங்கப்படுகிறது. அனைத்து திரைகளும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அதிநவீன 4K ரெசல்யூஷனுடன் பார்கோ டிஜிட்டல் புரொஜக்டர்களைக் கொண்டுள்ளன. 4K ரெசல்யூஷனில் (4906 x 2160) பிரமிக்க வைக்கும் வகையில் படங்கள் தெரிவதுடன், 33,000 Lumens துள்ளியமான நிறத்தை வழங்கும் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. திரைகள் அனைத்தும், அனைத்து அலைவரிசை வகைகளிலும் உயர்ந்த துல்லியத்தன்மையைக் கொடுப்பதற்காக உலகில் தலைசிறந்த QSC DCP 300 புராசஸருடன் 4 வழி QSC ஸ்பீக்கர்கள் வசதி கொண்டுளன. அதிக ஒலி தெளிவுத்தன்மை கிடைப்பதற்கு இந்தச் சாதனங்கள் SMPTE தரத்தில் தொனியேற்றப்பட்டுள்ளன. இதைக் கேட்கும்போது, ஈடு இணையற்ற ஒலி அனுபவத்தை நீங்கள் பெற்றிடுவீர்கள்.
டால்பி சூழ்நிலை
சினிமா ஒலியமைப்பில் அதிநவீனமான டால்பி அட்மாஸ் ஒரு திரையில் தற்போது நிறுவப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் எல்லாத் திரைகளிலும் டால்பி அட்மாஸ் நிறுவனப்படுவதற்கான திறனாக்க வசதி அமைக்கப்பட்டுள்ளது.
நிறுவப்பட்டுள்ள அனைத்து அமைப்புகளும் துல்லியமான சோதிப்பு சாதனங்களால் பரிசோதிக்கப்பட்டுள்ளன மற்றும் தொழிற்சாலையில் நல்ல பயிற்சியளிக்கப்பட்ட, நிறுவனத்தின் சொந்த பொறியாளர்களால் நிறுவப்பட்டு இயக்க நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
வடிவமைப்பு விவரங்கள்
லக்ஸின் ஒட்டுமொத்த உள் வடிவமைப்பையும், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் காஸ்டர் டிசைன் நிறுவனத்தைச் சேர்ந்த டிசைனர் Giovanni Castor-ஆல் உருவாக்கப்பட்டது. Remedios Siembieda என்று அழைக்கப்படும் Chhada Siembieda நிறுவனத்துடன் இணைந்து பல வருடங்கள் பணி புரிந்துள்ளார். மிகப் பிரபலமான நிபுணரான IMPei உடன் இணைத்து நியூ யார்க்கில் பணி புரிந்துள்ளார். மெக்சிகோவிலுள்ள Kacienda de San Antonio, French Polynesiaவிலுள்ள Adrian Zecha’s Arman Resorts-சும், Giovanni Vastorஇல் வடிவமைக்கப்பட்டவை. கலிஃபோர்னியா Three Architectureஉடன் L’Ermitage Beverly Hills, Pei Cobb Freed உடன் the Park Hyatta Taichung, Lohan Associates உடன் Grand Hyatt Mumbai மற்றும் மாலத்தீவில் உள்ள Rangali Island Resort, இவர் உள்ளமைப்பு வடிவமைப்பாளராகப் பணிபுரிந்த இடங்கள். இதற்கு முன்பு தனது பல திட்டங்களில் காஸ்டருடன் சேர்ந்து SPI சினிமாஸ் செயலாற்றியுள்ளது. லக்ஸின் உள் அலங்கார அமைப்பில் ஒளியமைப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப் பெறுகிறது. விரிவான ஒளியமைப்பு டிசைன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த ஒளியமைப்பு வடிவமைப்பாளர் இன்டக்ரேடட் லைட்டிங் டிசைன சேர்ந்த பாபு சங்கரால் நிறைவேற்றித் தரப்பட்டது. இந்தத் திட்டத்தில் அலங்காரம் மற்றும் ஒளியமைப்பு அனைத்திற்கும் சங்கர் மற்றும் ஐஎல்டி நிறுவனமே முக்கிய பொறுப்பாகும்.
சர்வீஸ் கான்செப்ட்கள்
லக்ஸில் கிடைக்கின்ற சேவை கருத்தாங்களை எஸ்கேப் திரையரங்குடன் ஒப்பிட்டுப் பார்ப்பது நியாயமாகும், நிலையான சினிமா சேவைகளுக்கும் இங்குக் கூடுதலாக வழங்கப்படும் முக்கிய சேவைகள் பின்வருமாறு:
தானியங்கி டிக்கெட் கொடுக்கும் கவுன்டர்கள்
லக்ஸ் நுழைவாயிலில் உள்ள ஒட்டுமொத்த சுவரில் அணுக்கம் மட்டுமில்லாமல், வருபவர்களுக்கு திரைப்படங்கள் மற்றும் அமர்வுகள் குறித்து மதிப்புமிக்க தகவல் வழங்கும் திரைகளுக்கும் அணுக்கம் தரப்பட்டுள்ளது. சுவரில் பொருத்தபட்டிருக்கும் திரைகளில் திரையரங்கின் வசதிகள் பற்றிய தகவல்கள், திரைப்படங்கள் பற்றிய தகவல், அமர்வு நேரங்கள் பற்றி பிரவுஸ் செய்வதுடன் அவர்கள் முன்பதிவு செய்த டிக்கெட்களைப் பெறுதல் முதலியவற்றையும் செய்து கொள்ளலாம்.
ரீடெய்ல் ஸ்டோர்
முன்கூடத்தின் மையப் பகுதியில் அழகிய சில்லறை விலை கடையும் உள்ளது. இதில் அன்பளிப்புப் பொருட்கள் மற்றும் நினைவுப் பொருட்களையும் லக்ஸிற்கு வந்த நினைவாக வாங்கிக் கொள்ளலாம்.
ஸ்பா
லக்ஸில், ரிலாக்ஸ் செய்து கொள்வதற்கென்று ஒரைஸா நிபுணர்களால் செயல்படுத்தப்படும் ஸ்பா ஒன்றுள்ளது. உலகில் தலைசிறந்த மசாஜ் நாற்காலியான இனாடா சொக்னோ நாற்காலியில் அமர்ந்து வாடிக்கையாளர்கள் மசாஜ் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். பிற அற்புதமான சிகிச்சைகளுள் ஒன்றை அல்லது ரிஃப்லெக்ஸாலஜி செயற்பாட்டை விருந்தினர்கள் அனுபவித்து தங்களை ரிலாக்ஸ் செய்துகொள்வதற்கென தனிப்பட்ட அமைவிடமும் இந்த ஸ்பாவில் இடம்பெற்றிருக்கிறது.
உணவகம் – கஃபே தி லக்ஸ்
லக்ஸில் அமைந்துள்ள ரெஸ்டாரன்ட் அற்புதமாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. பிரதான முன்கூடத்தில் அமைந்துள்ள உணவகத்தில், உணவருந்தும் வசதியும் மற்றும் முன்கூட இருக்கை வசதியும் சேர்ந்து அமைந்துள்ளன. இங்கு முழு சேவை வழங்கும் ரெஸ்டாரன்ட் தரத்தில் இந்தியன், இத்தாலி, மற்றும் சைனீஸ் உணவுகள் கிடைக்கின்றன. சினிமா கூடத்தின் முடிவில் இது அமைந்திருக்கிறது மற்றும் ரிலாக்ஸ்டாகப் பொழுதுபோக்குவதற்கான வடிவமைப்பை இது கொண்டிருக்கிறது.
18 பிலோவ்
லக்ஸில் உணவகத்தைத் தொடர்ந்து ஐஸ் க்ரீம் பிரியர்களுக்கு என்று பிரத்தியேகமாக “18 Below” என்கிற ஐஸ் க்ரீம் ஸ்டால் ஒன்று அமைந்துள்ளது. நீங்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒரு புதிய ஐஸ் க்ரீம் அனுபவத்தை, எண்ணற்ற Flavor – களில், புதிய சுவைகளுடன் ருசிக்கலாம். இந்த ஐஸ் க்ரீம் மற்றும் டாபிங்ஸ் (Toppings) சைவ உணவு முறையில் தயாரிக்கப்பட்டவை. கஸ்டமர்களை மேலும் கவரும் வகையில் அவரவர் தம் விருப்பதிற்கேற்ப பிடித்தமான Flavor மற்றும் டாப்பிங்ஸ் (Toppings)களைக் கோண்டு ஃபேவ்ரேட் ஐஸ் க்ரீம் உருவாக்கிக் கொள்ளலாம்.
விளையாட்டு
கஃபேவை ஒட்டி விளையாட்டு (கேமிங்) இடம் அமைந்திருக்கிறது. படம் பார்ப்பதற்கு காத்திருக்கும் நேரத்தில் அல்லது அவர்களது பெற்றோர்கள் தேநீர் அல்லது காஃபியை ரசித்து அருந்திக் கொண்டிருக்கிற நேரத்தில், புதிய தலைமுறை விளையாட்டுகளை குழந்தைகளை விளையாடுவதற்கு ஏற்ற வகையில், புதிய தலைமுறைக்கான கேமிங் கன்சோல்கள் மற்றும் பல விளையாட்டுகள் உள்ளன.