வேல்ஸ் ஃபுட்பால் க்ளப்புடன் இணைந்த ஸ்பெயின் கால்பந்து வீரர்
வேல்ஸ் குழுமங்களில் நிறுவனத்தலைவர் டாக்டர். ஐசரி கே. கணேஷ் பன்முகம் திறமை கொண்டவர். கல்வி, திரைத்துறை, விளையாட்டு, சமூக சேவை எனப்பல தளங்களில் முன்னேற்றத்தை கொண்டு வர உழைத்து வருபவர். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் மற்றும் இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவராக உள்ள டாக்டர் ஐசரி.கே.கணேஷ், விளையாட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களின் திறமைகளை வளர்ப்பதற்காக தொடர்ந்து பயணித்து வருகிறார்.இதன் ஒரு பகுதியாக டாக்டர் ஐசரி கே கணேஷின் சிந்தனையில் உருவானது தான் வேல்ஸ் கால்பந்து கிளப். இந்த கிளப் தமிழ்நாட்டில் கால்பந்து விளையாட்டை வளர்ப்பதற்காக தொடங்கப்பட்டது. தற்போது இந்த கிளப் கால்பந்து விளையாட்டு மீது ஆர்வம் கொண்டுள்ள பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்ஸ் குழுமங்களின் நிறுவனத...