Search

ஃபாக்ஸின் எக்ஸ் – மேன்

எக்ஸ்-மென்

இதுவரை கண்டிராத தொழில்நுட்ப அதிசயங்களின் அடுத்த கட்டம் தான் X-Men days of the future past.

சூப்பர் ஹீரோஸ் படங்களுக்கு என்று என்றுமே ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. காமிக்ஸ் வடிவத்திலும், தொடராகவும் எல்லோரையும் கவர்ந்த எக்ஸ் – மேன் குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் கவரும் என்பதில் ஐயமே இல்லை. 3-டி படங்கள் பார்பதற்கு சரியான சாதனைகள் மட்டுமே அவசியம் இல்லை, அந்த காட்சி அமைப்புக்கு ஏற்ப பிரம்மாண்டமும் கதைக்களமும் அவசியம். அத்தகைய பிரம்மாண்டத்தைச் சாத்தியப்படுத்த, தொழில்நுட்பத்தின் உச்சத்தைப் படத்தில் உபயோகப்படுத்தியுள்ளனர் என்றால் மிகையாகாது. ‘திரைப்படங்களில் தொழில்நுட்பம்’ என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் , X-Men days of the future past இதுவரை வந்த படங்களில் மிகச் சிறந்த படமாக இருக்கும் என திரையுலக வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

ஹக் ஜேக்மேன் ஏழாவது முறையாக நீண்ட கொடிய நகங்களுடனும், பண்டைய காலத்து மனிதனை நினைவுப்படுத்தும் சிகை அலங்காரத்துடன் நடிக்கிறார். நொடியில் நிறம் மாறும், உருமாறும் தன்மை கொண்ட ரவேன் ஆக ஜென்னிபர் லாரன்ஸ் நடித்துள்ளார். மே 23 ஆம் தேதி உலகமெங்கும் ஒரே நேரத்தில் வெளியிடப்படுகிறது.