32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

எகிப்தின் கடவுள்கள்.!

Dinesh R சேலம் Published: 17/02/2016 1 நிமிட வாசிப்பு Updated: 18/07/2016 அயல் சினிமா
எழுத்து அளவு:

Gods of Egypt

சலிக்கச் சலிக்க கிரேக்கக் கடவுள்களின் சண்டைகளை ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்பீர்கள். இப்பொழுது எகிப்தியக் கடவுள்களின் சண்டையை ஜோரான விஷூவல் எஃப்ட்ஸுடன் காணத் தயாராகுங்கள்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஹாலிவுட்டின் லயன்ஸ்கேட்டுடன் இணைந்து வியகாம் 18 (Viacom 18) மோஷன் பிக்சர்ஸ், ‘காட்ஸ் ஆஃப் எகிப்த் (Gods of Egypt)’ படம், இம்மாதம் 26 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இந்தியாவில் வெளியிடவுள்ளது.

300 படத்தில் ஸ்பார்ட்டாவின் மன்னன் லியோநிடாஸாக நடித்த ஜெரார்ட் பட்லர், இருள் கடவுள் ‘செத்’தாக நடிக்கிறார். அவருக்கு எதிராகப் போர் புரியும் காற்றுக் கடவுள் ஹோரஸாக நிக்கோலாய் கோஸ்டர் வால்டாவ் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து பெரிய பெரிய விநோத மிருகங்களும், இடையில் சிக்கித் தவிக்கும் மனித இனத்தை அச்சுறுத்த வருகின்றன.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.