32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

கமலின் உத்தமனும் மனோரஞ்சனும்

Dinesh R சேலம் Published: 15/03/2014 2 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

உத்தம வில்லன் Uthama Villan

உத்தமன் என்ற 8ஆம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞன் பாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21ஆம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரமாக மற்றொரு பாத்திரத்திலும் கமல்ஹாசன் நடிக்கிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மனோரஞ்சனைக் கண்டெடுத்த நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்த்திய, குருவாக சினிமா இயக்குநராக K.பாலசந்தர் அவர்களும் நடிக்கிறார்.

மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசியும், மனோரஞ்சனின் மாமனாராக திரு.K.விஸ்வநாத்தும், 8ஆம் நூற்றாண்டில் நடக்கும் உத்தம வில்லனின் கதையில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமாறும், 21ஆம் நூற்றாண்டுக் கமலின் ரகசியக் காதலியாக ஆண்ட்ரியா ஜெரமியாவும் நடிக்கின்றனர்.

முத்தரசன் என்ற 8ஆம் நூற்றாண்டுக் கொடுங்கோல் சர்வாதிகாரியின் பாத்திரத்தில் நாசரும், ஜேகப் ஜக்காரியா என்ற பாத்திரத்தில் ஜெயராமும், ஜெயராமின் வளர்ப்பு மகளாக கதையின் முக்கிய பாத்திரமொன்றில் பார்வதி மேனனும் நடிக்கிறார்கள்.

M.S.பாஸ்கர் சொக்கு செட்டியார் என்ற நினைவில் நிற்கக் கூடிய ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார்.

நடிகர்கள்:

>> கமல் ஹாசன்
>> நாசர்
>> ஜெயராம்
>> பூஜா குமார்
>> ஆண்ட்ரியா
>> ஊர்வசி
>> பார்வதி மேனன்
>> M.S.பாஸ்கர்

சிறப்புத் தோற்றம்:

>> K.பாலசந்தர்
>> K.விஸ்வநாத்

பணிக்குழு:

>> இயக்கம் – ரமேஷ் அர்விந்த்
>> கதை, திரைக்கதை – கமல்ஹாசன்
>> ஒளிப்பதிவு – ஷாம்தத்
>> படத்தொகுப்பு – விஜய் சங்கர்
>> பாடல்கள் – கமல்ஹாசன், விவேகா
>> இசை – ஜிப்ரான்
>> VFX – மதுசூதனன்
>> தயாரிப்பு – N.சுபாஷ் சந்திரபோஸ்
>> இணை தயாரிப்பு – G.R.வெங்கடேஷ்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.