32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

கேடுகெட்ட கேவலமான லவ் ஸ்டோரி

Dinesh R சேலம் Published: 07/07/2015 2 நிமிட வாசிப்பு Updated: 22/07/2015 சினிமா
எழுத்து அளவு:

Trisha illana Nayanthara

த்ரிஷா இல்லனா நயன்தாரா – இந்த காலகட்டத்துக்கான லவ் படம். இன்னும் சரியா சொல்லணும்னா, கேடுகெட்ட கேவலமான லவ் ஸ்டோரி இது. இந்தப் படத்தின் இயக்குநர் ஆதிக் இரவிச்சந்திரம் தன் சொந்த வாழ்க்கையில் பண்ண லவ், காதல் கேட்ட லவ்வெல்லாம் வச்சு கற்பனை கலந்து கதையாக்கியிருக்கார். இப்பயிருக்கிற யூத் ஆடியன்ஸுக்குப் பிடிக்கிறாப்ல படம் எடுத்திருக்கார்” என்றார் படத்தைத் தயாரித்த கேமியோ பிலிம்ஸ் C.J.ஜெயகுமார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

படத்தை வழங்கும் ஸ்டுடியோ க்ரீன் K.E.ஞானவேல்ராஜா, “படம் தர லோக்கல்! இதுக்குன்னு இருக்கிற ஆடியன்ஸ்க்கு படம் வந்து நாளாச்சு” என ஜி.வி.பிரகாஷின் படத்தைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் திறமையைப் பாராட்டினார்.

“ஜி.வி.க்கு எந்த கதாப்பாத்திரமாவும் மாறி நடிக்கிற திறமை இருக்கு. நல்ல டைமிங் சென்ஸ் இருக்கு. ம்யூஸிக் போலவே நடிப்பிலும் கலக்கிறார். இந்தப் படம் கண்டிப்பாக ஹிட். ஏன்னா.. அரை டஜன் படம் பண்றோம்; அதுல நமக்கே தெரியும். இது கொஞ்சம் போயிடும்; இது போவாது. ஆனா இந்த படம் பெரியளவில் போயிடும்” என்றார் வி.டிவி.கணேஷ் தனக்கே உரிய பிரத்தியேகமான கரகரப்புக் குரலில்.

“ஒவ்வொரு காலகட்டத்துலயும் ஒவ்வொரு லவ் படம் வரும். குஷி, எஸ்.எம்.எஸ். போல.! இது இந்த ஜெனரேஷன் லவ் படம். இப்ப இருக்கிற பசங்க, பொண்ணுங்க ஆட்டிட்யூடைப் பிரதிபலிக்கிற படம். S.J.சூர்யா, செல்வராகவன், ராஜேஷ் வரிசையில்.. இந்த ஜெனரேஷன் டைரக்டராகக் கண்டிப்பா ஆதிக் இருப்பார்” என்றார் ஜி.வி.பிரகாஷ். இந்தப் படத்துக்காக, தனது கூச்சங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு இறங்கி அதகளம் புரிந்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

விர்ஜின் பசங்களின் சப்போர்ட் இப்பவே ஜி.வி.க்குத்தான்.!

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.