32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

கொச்சி திரைப்படத் திருவிழா

Dinesh R சேலம் Published: 13/10/2015 2 நிமிட வாசிப்பு Updated: 20/10/2015 சினிமா
எழுத்து அளவு:

ALIIFF (All Lights India International Film Festival) & Indywood Film Market ஆகிய இருவரும் இணைந்து கொச்சியில் நடத்தும் சர்வதேச திரைப்பட விழா, நவம்பர் 15 முதல் 21 வரை நடக்கவுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், www.aliiff.com என்ற இனையதளத்தில் பதிந்து கொள்ளலாம். நுழைவுக் கட்டணம் 500/- ஆகும். மாணவர்களுக்கு சலுகை விலையாக 300/- மட்டும் வசூலிக்கப்படுகிறது.

Indywood Film Market, தென்னிந்தியாவின் மிகப் பெரிய திரைப்பட சந்தையை உருவாக்குவதில் முன்னொடியானவர்கள். நவம்பர் 16 முதல் 18 வரை, ஹோட்டல் லீ மெரிடியனில், திரைப்படம் சார்ந்த பல்வேறு கூட்டத்தொடர்கள் திட்டமிடப்பட்டுள்ளது. 3000த்துக்கும் மேலான பிரதிநிதிகள் பங்கேற்கும் இக்கூட்டத்தொடர்களில், 100 படைப்பாளிகளுக்கு மேல் தங்கள் படைப்பைத் திரையிட உள்ளனர். திரை வியாபரத்திற்கான மிக முக்கியமான நிகழ்வாக இது அமையுமென்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளத் திரையுலகின் சார்பாக மோகன்லாலும், தெலுங்கு சினிமாவின் சார்பாக டக்குபாதி வெங்கடேஷும், மராத்திய திரையுலகின் சார்பாக சுபோத் பாவேவும் கலந்து கொள்கின்றனர். ‘Cinema for Care’ என்ற நிகழ்வுக்குத் தூதராக வங்காளத்தின் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ப்ரோசென்ஜித் சேட்டர்ஜியும், பாலிவுட் நடிகை கல்கி கொச்சலினும் பங்கேற்கிற்கின்றனர். ‘Cinema for Children’ என்ற நிகழ்வுக்குத் தூதராக, தென்னிந்திய நடிகை நிக்கி கல்ராணி பங்கேற்கிறார். ‘Cinema for Women’ என்ற நிகழ்வுக்குத் தூதராக மஞ்சு வாரியர் பங்கேற்கிறார்.

நடுவர் குழாம்:

>> கோஸ்ரா மசெளமி, இரானியன் இயக்குநர்
>> ரடோவன் ஹொலப், செக் நாட்டு சினிமா பத்திரிகையாளர்
>> கஜல் மசெளமி, நடிகை & இயக்குநர்
>> டன் வொல்மன், ஃப்லிம் மேக்கர்
>> உமா டா குன்ஹா, சினிமா பத்திரிகையாளர் & ஆய்வாளர்
>> கான் லூம், சிங்கப்பூர் ஃப்லிம் மேக்கர்
>> அஞ்சலி பூஷன், இந்தியன் எழுத்தாளர் & இயக்குநர்
>> ஆன்ட்ரோனிகா மார்ட்டோனோவா, ஆசியத் திரைப்பட விமர்சகர் & ஆய்வாளர்

கொச்சி திரையொளியால் ஒளிரப் போகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.