32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சாதாரணமானவர்களின் அசாதாரணமான ஜின்

Dinesh R சேலம் Published: 06/05/2015 1 நிமிட வாசிப்பு Updated: 07/05/2015 சினிமா
எழுத்து அளவு:

ஜின்

ஜின் – ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாய்க் கொண்டு உருவாக்கப்படும் படம். சாதாரணமான ஐந்து நண்பர்களின் வாழ்வில் ஏற்படும் ஓர் அசாதாரணமான அமானுஷ்ய நிகழ்வை மையமாகக் கொண்ட படம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ரைட் மீடியா ஒர்க்ஸ் மற்றும் சதீஷ் சந்திரசேகரனின் கதைகள் நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பில் உருவாகி வருகிறது.

இப்படத்தைப் பற்றி இளம் அறிமுக இயக்குநர் சதீஷ் சந்திரசேகரன் கூறுகையில், “கலையரசன், மெட்ராஸ் ஹரி, காளி வெங்கட், அர்ஜுனன், ‘முண்டாசுப்பட்டி’ முனீஸ் காந்த் ஆகிய சாதாரணமான ஐந்து நண்பர்களின் பிரயாணத்தில் ஏற்படும் அசாதாரணமான நிகழ்வைச் சுற்றி அமைந்ததே ‘ஜின்’.

எம்.ஜி.ஆரின் ‘அன்பே வா’, ரஜினி அவர்களின் ‘தம்பிக்கு எந்த ஊரு’ படங்களில் வந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு பங்களாவில் படப்பிடிப்பு நடத்தினோம். திகில் படத்திற்கு ஏற்றவாறு இருண்டிருந்த அந்தக் கட்டடத்தில் கொடிய மிருகங்களும் கூடி இருந்தது.

எனக்கு இந்தப் படத்தை எழுதுவதிலோ, படமாக்குவதிலோ எந்தவித சிரமும் ஏற்படவில்லை. ஏனெனில் அந்த ஐவரில் நானும் ஒருவன்” என்றார் இயக்குநர் சதீஷ் சந்திரசேகரன்.

இயக்குநர் குறிப்பிடும் அந்த அசாதாரணமான அமானுஷ்ய சக்திகள் என்னவாக இருக்கும்?

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.