32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

தத்துவப்பாடல் பாடிய வி.டி.வி.கணேஷ்

admin சேலம் Published: 04/12/2013 1 நிமிட வாசிப்பு Updated: 18/01/2014 சினிமா
எழுத்து அளவு:
inga enna solluthu

இங்க என்ன சொல்லுது‘ படத்தின் இசை  டிசம்பர் 5 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.  இதுவரை வெளிவராத கதை களத்தின்  பின்னணியில், நகைச்சுவை இழை ஓட படமாக்கப்பட்ட இங்க என்ன சொல்லுது திரைப்படத்தில் கதாநாயகனாக வி.டி.வி.கணேஷ் நடிக்க, அவருக்கு  இணையாக மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார்.  

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

எஸ்.டி.ஆர். (STR)  இந்தப் படத்தில் கௌரவத் தோற்றத்தில் ஒரு முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ளார்.அவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். கதையை நகர்த்திச் செல்லும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார். மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, நகைச்சுவை மிளிர எடுக்கப்படும் இந்தப் படத்தின் முக்கிய நடிகர்களான பாண்டியராஜன், மயில் சாமி, இயக்குநர் கே. எஸ் .ரவி குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஸ்வர்ணமால்யா நடித்துள்ளார். இப்படத்தில் படத்தொகுப்பாளர் ஆண்டனி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இசையமைப்பாளர் தரனின் இசையில் வானவில் போல ஏழு பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு நிறமும் ஒரு குணமும் உண்டு. இந்தப் பாடல் தொகுப்பின் முக்கிய அம்சம் கணேஷ் இயற்றிய இரண்டு பாடல்களும் அதில் அவரே பாடிய ஒரு பாடலும் உள்ளது. தனது வித்தியாசமான குரலால் தனி இடம் பிடித்த கணேஷ் பாடும் பாடல்  பட்டாம் பூச்சியின் வாழ்கையைப் பற்றிய தத்துவப் பாடலாகும்.  

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க