32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“தூக்குடா சோலர் ஸ்டார!”

Dinesh R சேலம் Published: 15/04/2014 1 நிமிட வாசிப்பு Updated: 09/05/2014 சினிமா
எழுத்து அளவு:

Vallavanukku Pullum Aayutham Santhanam

“’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்துல முக்கியமான ரோலில் நடிச்சிருக்காரு சோலர் ஸ்டார். அவர் யாருன்னா.. தேவயாணி மேடம் புருஷன் இராஜ்குமார் சார். எப்படி, ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா!’ல பவர் ஸ்டாரை நடிக்க வச்சோமோ அப்படி இந்தப் படத்தில் இவர் நடிச்சிருக்கார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

வாயில ஜாங்கிரி வச்சுக்கிட்டு, சோலார் ஸ்டார் என படம் நூறு நாளும் நூத்தம்பது நாளும் போச்சுன்னு விளம்பரம் பண்ணியிருந்தார். சரி இவரை மாதிரி ஒரு ஆள் தேவைன்னு.. தூக்கு இவரன்னு சொன்னேன். அவரைத் தூக்கிட்டு வந்துட்டாங்க. அதுல என்னன்னா.. அவர் வீட்டுல சொல்லிக்காம துணிமணிலாம் கட்டிட்டு வந்துட்டிருக்கார். அவர் வீட்டுல ஃபோன் பண்ணிக் கேட்கிறாங்க, ‘அவர் வந்திருக்காரா? சொல்லாம ஓடி வந்துட்டாரு’ன்னு. நான் அவர்ட்ட கேட்டேன். “ஏன்ங்க சொல்லாம வந்தீங்க?” என.

அதுக்கு அவர் சொன்னார்.. அவங்க வீட்டுல ஒப்பாரி வச்சு அழுவுறாங்களாம். சந்தானம் ஆர்யா சூர்யாவையே ஓட்டுவான். நீ போன்னா அல்வா துண்டு மாதிரி. உன்னை பயங்கரமா கலாய்ப்பான். அப்புறம் என்னால் வெளில போக முடியாதுன்னு சொன்னாங்களாம்.

அவர் என்னிடம் கேட்டார், “பெருசா ஒண்ணும் கலாய்ச்சுட மாட்டீங்கதான?”. அப்படிலாம் ஒண்ணுமில்ல சார். உங்களுக்கு ஸ்கோப் இருக்கிற முக்கியமன கேரக்டர்னு சொன்னேன். அப்போ ஓகே சார்ன்னு நடிச்சுக் கொடுத்திருக்கார்” என்றார் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ இசை வெளியீட்டு விழாவில் சந்தானம்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.