32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

பாடகி கீர்த்திகா

Dinesh R சேலம் Published: 27/03/2014 1 நிமிட வாசிப்பு Updated: 28/03/2014 சினிமா
எழுத்து அளவு:

Keethika Uthaya கீர்த்திகா உதயா

நடிகர் உதயாவின் மனைவியும், ‘ரா ரா’ படத்தின் தயாரிப்பாளருமான கீர்த்திகா உதயா, பின்னணிப் பாடகியாகவும், டப்பிங் கலைஞராகவும் பல படங்களில் பணியாற்றி வருகிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘இனம்’ படத்தின் நாயகிக்கு மூன்று மொழிகளில், பின்னணிக் குரல் ¬¬கொடுத்திருக்கிறார் கீர்த்திகா உதயா.

இப்படத்திற்கு முன்னதாக விஜய் இயக்கத்தில் வெளிவந்தா ‘தாண்டவம் படத்திற்காக நடிகை லட்சுமி ராய்க்கும், ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள ‘நான்தாண்டா’ படத்திற்காக நாயகி அனைகாவிற்கும் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.

தற்போது, ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படத்தின் நாயகி அர்ஷிதாவிற்கும், ‘யாமிருக்க பயமே’ நாயகி ரூபா மஞ்சரிக்கும் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார்.

“ரா ரா, நாந்தாண்டா, இனம்’ ஆகிய படங்களில் பாடல்களைப் பாடியும் இருக்கிறார்.

மாமனார் ஏ.எல்.அழகப்பன் – தயாரிப்பாளர், கணவர் உதயா – நடிகர், மைத்துனர் விஜய் – இயக்குநர் என்ற திரைக்குடும்பத்தில் ஒரு புதிய ‘குயில்’ ஆக இணைந்துள்ளார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.