32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக

Dinesh R சேலம் Published: 14/07/2016 2 நிமிட வாசிப்பு Updated: 17/07/2016 சினிமா
எழுத்து அளவு:

Koditta idangalai nirappuga

Crowd funding முறையில் தயாரிக்கும் இப்படத்தை PROUD funding என்றே தற்பெருமையாக ஏன் குறிப்பிடுகிறேன் என்று சொல்லும் முன், இன்று இன்னும் இரண்டு படங்கள் என் நடிப்பில் துவங்குகிறது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே. நண்பர் சுசீந்திரன் இயக்கத்தில் தம்பி விஷ்ணு விஷாலுடன் இணையும் ஒன்றும், புதிய இயக்குநர் சுதர்சன் இயக்க ‘கயல்’ சந்திரனுடன் நடிக்கும் 2MB தயாரிப்பில் இன்னொன்றும் இப்படி மூன்று படங்கள் இன்றைய தளத்தில் – நாளைய தரத்தில்!

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இன்னும் ஒன்று தேனாண்டாள் படம் அக்டோபரில், இன்னும் சில பேச்சு வார்த்தையில். இதை விட, எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எனக்காக ஒரு கதை சொல்ல கேட்ட ‘உடன்’ நானே அவருக்கு முன் தொகை கொடுத்து முன் பதிவு செய்து கொண்டுள்ளேன். அதுவும் விரைவில் துவங்கும். சோ, குறை ஒன்றுமில்லை – இருந்தால் மறைக்காத மூர்த்தி நானே!

‘REEL estate company llp’ என்ற crowd/proud funding என்ற கூட்டு தயாரிப்பு நிறுவனம் துவங்க பணத்தேவை முக்கிய காரணமில்லை. ஃபேஸ்புக் நண்பர்களுக்கான சந்திப்பில் நண்பர் விஜயகுமார், “10 லட்சம் தான் என்னால் முதலீடு செய்ய முடியும். என்னைப் போன்றவர்களை இணைத்து ஒரு படம் நீங்கள் எடுக்க வேண்டும்” என வேண்டியதோடு அதற்குரிய காசோலையைக் கிழித்து கையில் திணித்து விட்டும் போனார். அதை அறிந்த இன்னும் சிலர் தானாக முன்வந்தார்கள்.

அப்படி துலங்குகிறது இப்படம் லாபம்: மிக மிக மிக மிகச் சிறிய முதலீட்டிற்கு அதீத லாபமும் வரலாம் சொற்ப நஷ்டமும் வரலாம் என்பது கணக்கு. ஆனால் என் கணக்கு நம்பியவர்களுக்கு நயா பைசாவாவது லாபமாகக் கொடுத்து நம்பிக்கையைக் காப்பாற்றி இந்த சிறு/குறு முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதின் மூலம் பிற்காலத்தில் பெரிய பட்ஜட் படங்கள் செய்யலாம். களவு போய்க் கொண்டிருக்கும் திரைத்துறைக்குப் புத்துனரச்சி தரும் விதமாக புதிய தயாரிப்பாளர்களை அறிமுகம் செய்யலாம். இவ்வகையான தயாரிப்பை என்னைப் போன்ற பணத்திற்கு அப்பார்பட்டவர்கள் மட்டுமே நேர்மையாகச் செய்ய முடியும். படத்தைத் துவங்கி விட்டு இதை வெளியிடலாம் என்றே இன்று இடுகிறேன் வெளி! இது இராதாகிருஷ்ணன் பார்த்திபன் இடும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’.

கோடிட்ட இடங்களை நிரப்புக

சத்யா இசையில், “கண் மூடினால் தெரிவேனே – எனைத் தொட நாடினால் மறைவேனே” என்ற மதன் கார்க்கியின் பாடல் யூ(த்)தர்களின் இதய ATM-ஐக் களவாடும் என்பதில் ஐயமில்லா ஜெயமுன்டு!

– இராதாகிருஷ்ணன் பார்த்திபன்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.