32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“விஷால் கருப்பு மனிதன்தான!?”

Dinesh R சேலம் Published: 13/03/2014 2 நிமிட வாசிப்பு Updated: 14/03/2014 சினிமா
எழுத்து அளவு:

Naan Sigappu Manithan நான் சிகப்பு மனிதன்

“விஷால் நடிக்கணும்னு ரொம்ப விருப்பப்பட்டது என் மனைவிதான். ‘அவன் இவன்’ பார்த்த பிறகு.. நான் ரொம்பவே சந்தோஷப்பட்டேன். நீ ரொம்ப நல்ல நடிக்கிறன்னு அவன்கிட்ட சொன்னேன். ஸ்டெப் பை ஸ்டெபாக அவன் கோலை (goal) அச்சீவ் பண்றான். அனைவரிடமும் நட்பாகப் பழகுகிறான். இவன் எல்லோரையும் லைக் பண்றான். இவனை மத்தவங்களுக்குப் பிடிக்குது. ரொம்ப சந்தோஷமான அப்பாவாக உணர்கிறேன்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

‘நான் சிகப்பு மனிதன்’ என படம் பண்றேன்னு சொன்னான். “நீ எப்படி சிகப்பு மனிதன்? நீ கருப்பு மனிதன்தான?” எனக் கேட்டேன். “இல்ல டாடி.. சிகப்பு மனிதன் என்பது கேரக்டருன்னு சொன்னான். சினிமா தான் நெ.1 எண்டர்டெயினிங் இண்டஸ்ட்ரி உலகத்தில். அந்த இண்டஸ்ட்ரியோட நானும் என் மகனும் நண்பர்களும் அசோசியேட் ஆகியிருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கு” என்றார் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி.

“கிரிக்கெட்டாகட்டும் சினிமாவாகட்டும் விஷாலிடம் எனக்கு ரொம்ப பிடிச்சது அவருடைய “தில்”லு. அவருடைய தைரியத்தாலதான் அவர் இவ்வளவு பெரிய வெற்றி அடைஞ்சிருக்காரு. அந்த விஷயத்தில் அவரை எங்களை மாதிரி யங்ஸ்டர்ஸ் நிறைய பேர் அவரை ஃபாலோ பண்றோம்” என்றார் நடிகர் சாந்தனு பாக்யராஜ்.

“விஷாலிடம் சினிமா பற்றி நிறைய பேசியிருக்கேன். அவரொரு விஷயத்தை எடுத்தார்னா.. அதை முடிக்கிற வரைக்கும் அவர் தீவிரமா இருந்து முடிக்காம விடமாட்டார். நார்கோலெப்ஸியே வந்தாலும் முடிச்சுடும் பிடிவாதமான குணமுண்டு. அவரிடம் அற்புதமான லீடர்ஷிப் க்வாலிட்டியிருக்கு. அவருடன் வொர்க் பண்றவங்களுக்கு அது தெரியும்.

‘நான் சிகப்பு மனிதன்’ படத்தோட முக்கியமான விஷயம்.. நாலு மாசத்தில் ஒரு படத்தை முடிக்கக் கூடிய ஃப்ரொஃபஷ்னல் டீம் இது. இதுதான் இப்போதைய தேவை. இந்தத் திட்டமிடுதல்தான் முக்கியம்” என்றார் நாசர்.

“விஷால் ஃபிலிம் ஃபேக்டரில் ஒரு படத்தைத் தொடங்கினா அப்பவே ரிலீஸ் தேதியும் அறிவிக்கணும்னு எனக்கு ஆசை. முதல் தடவை அப்படி வெற்றிகரமாக ‘பாண்டிய நாடு’ படம் தீபாவளிக்கு வந்துடுச்சு. நான் மட்டும் நினைச்சா இது நடக்காது. என்னோட டீம்ல இருக்கிற அனைவரும் உழைச்சு, டிசம்பரில் தொடங்கி ஏப்ரல் 11 இந்தப் படத்தை ரிலீஸ் பண்ண முயற்சிக்கிறோம். இந்த டீம் என்னுடைய சொத்து. நான் ஒரு வீடு வச்சிருக்கேன்; கார் வச்சிருக்கேன் என்று சொல்வதைவிட.. என்னிடம் இத்தகைய டீம் இருக்கு என்று சொல்வதைப் பெருமையாக நினைக்கிறேன்” என்றார் நடிகர் விஷால்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.