இந்த ஆண்டின் இறுதிக்கட்டத்தை டங்கி திரைப்படத்தின் மனம் வருடும் பயணத்துடன் முடிப்பதற்காக, ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
ஜவான் வெற்றியைத் தொடர்ந்து SRK இந்த ஆண்டில் மீண்டுமொருமுறை சாதனை நிகழ்த்தியுள்ளார்! டங்கி டிராப் 4 (டிரெய்லர்) வெளியான வேகத்தில் பெரும் சாதனை படைத்து வருகிறது. இந்த டிரெய்லர் மனதின் உணர்ச்சிகளைத் தூண்டி, ராஜ்குமார் ஹிரானியின் படைப்பாக்கத்தின் திரை அழகை எடுத்துக்காட்டுகிறது. பொம்மன் இரானி, டாப்ஸி பாணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர், மற்றும் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த, இன்னும் பல திறமையான நடிகர்களால் சித்தரிக்கப்பட்ட வண்ணமயமான கதாபாத்திரங்களுடன், பார்வையாளர்களை ஒரு ரோலர்-கோஸ்டர் சவாரிக்கு இந்த வீடியோ அழைத்துச் செல்கிறது.
ஷாருக்கின் வசீகரத்துடன் ராஜ்குமார் ஹிரானியின் மனதைக் கவரும் தருணங்களுடன் மாயாஜாலத்தை நிகழ்த்தும் டங்கி டிரெய்லர் 24 மணி நேரத்திற்குள் அனைத்து தளங்களிலும் 103 மில்லியன் பார்வைகளை பெற்று, சாதனை படைத்துள்ளது, இது ஒரு இந்தி மொழிப் படம் இதுவரை செய்யாத உச்சபட்ச சாதனையாகும்!
தனது சொந்த சாதனைகளை முறியடிப்பதில் திரையுலகின் வல்லவராக அறியப்படும் ஷாருக், சமீபத்தில் மெகா ஹிட்டான ஜவானிலும் இதையே செய்திருந்தார், தற்போது டங்கி மூலம் மீண்டுமொரு முறை அந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
டங்கி டிராப் 4 (டிரெய்லர்) வெளியானதிலிருந்தே பார்வையாளர்களின் அன்பைப் பெற்று, எட்டுதிக்கும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறது.
இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் வசீகரமான படைப்புலகில் நம்மை அழைத்துச் செல்வதுடன், நான்கு நண்பர்களின் இதயத்தைத் தூண்டும் கதையையும் வெளிநாட்டுக்கு செல்லும் கனவில் அவர்களின் தேடலையும் நமக்குச் சொல்கிறது. நிஜ வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள டங்கி திரைப்படம் அன்பு மற்றும் நட்பின் பெருமையை விவரிக்கும் காவியமாகும், இது பெருமளவில் வேறுபட்ட மனிர்தர்களின் கதைகளை ஒன்றாக பின்னுகிறது, அந்த கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் அவர்களின் நகைச்சுவை பக்கத்தையும், அதற்கான இதயம் அதிரும் பதில்களையும் வழங்குகிறது.
இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பரில் வெளியாகிறது.
https://x.com/redchilliesent/status/1732317879180439989?s=46&t=PusltWkTns46RNMqjWxAeA