32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

பிளான் பண்ணி பண்ணணும் – இசை வெளியீடு

Dinesh R சேலம் Published: 12/03/2020 2 நிமிட வாசிப்பு Updated: 22/04/2020 சினிமா
எழுத்து அளவு:

ppp-audio-launch

ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’. இப்படத்தின் இசை வெளியீடு சென்னை சத்யம் அரங்கில் 11 மார்ச் அன்று நடைபெற்றது. பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள இப்படத்தை, பாசிடிவ் பிரின்ட் ஸ்டுடியோஸ் சார்பாக ராஜேஷ் குமாரும், L.சிந்தனும் தயாரித்துள்ளனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ், “இப்படத்தின் ஷூட்டிங்கை மிகக் குறைந்த காலத்தில் முடித்துள்ளோம். ஒட்டுமொத்த குழுவின் உதவியில்லாமல் இது சாத்தியமில்லை. படத்தில் 18 ஆர்டிஸ்ட் உள்ளனர். அவர்களது ஒத்துழைப்பால் தான் இது சாத்தியமாயிற்று. அற்புதமான பாடல்களை அளித்துள்ள யுவன் சங்கர் ராஜா அவர்களுக்கு நன்றி. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் ரியோ ராஜை அறிமுகம் செய்ததற்காக சிவகார்த்திகேயனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அப்படத்தைப் பார்த்துதான், ரியோ ராஜ் இந்த கேரக்டரின் எமோஷன்ஸைச் சுமக்கக்கூடிய நடிகர் என்பதைத் ஹெரிந்து கொண்டேன்” என்றார்.

சிவகார்த்திகேயன், “நான் பத்ரி சார் இயக்கிய பானா காத்தாடி படத்தின் பெரிய படம். பொதுவாக அவரைப் போல் திரைப்படக் கல்லூரியில் கோல்ட் மெடலிஸ்ட் பெற்றவர்கள், ஆஃப்-பீட் படங்கள் எடுப்பதிலேயே ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் இவர் விதிவிலக்காகக் கமர்ஷியல் படங்கள் எடுத்துவருகிறார். சினிமா மீதான அவரது ஆர்வத்தை இது காட்டுகிறது. சமீபத்தில் ரம்யா நம்பீசனின் குறும்படம் பார்த்து வியந்தேன். விரைவில் அவர் படம் இயக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்றார்.

ரோபோ சங்கர், “இயக்குநர் பத்ரி மிகத் திறமையானவர். அதனால் தா அவரால் 18 நடிகர்கள் இருந்தும், 28 நாளில் ஷூட்டிங்கை முடித்துள்ளார்”எனப் புகழ்ந்தார். முடிக்க அதீத திறமை வேண்டும். ரியோக்கு மகள் பிறந்துள்ள வேளை மிக அதிர்ஷ்டக்கரமாக இருக்கும்” என வாழ்த்தினார.

ரம்யா நம்பீசனின் தந்தையாக சந்தான பாரதி நடித்துள்ளார். மேலும், பால சரவணன், பழைய ஜோக் தங்கவேலு, விஜி சந்திரசேகர் முதலிய நட்சத்திரங்களும் படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.