32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” – ஜீ5 இணையத் தொடர்

Dinesh R சேலம் Published: 17/11/2022 3 நிமிட வாசிப்பு OTT
எழுத்து அளவு:

தமிழ் ஓடிடி உலகில் புதுமையான படைப்புகள் மூலம் அனைவரையும் கவர்ந்து வரும் ஜீ5 தளத்தின், அடுத்த படைப்பாக வெளிவருகிறது “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” இணையத் தொடர். முன்னணி இயக்குநர் விஜய் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ள இத்தொடரை விஜய், பிரசன்னா JK, மிருதுளா ஸ்ரீதரன் இணைந்து இயக்கியுள்ளனர். முழுக்க நடனத்தைப் பின்னணி கதைக்களமாகக் கொண்டு இத்தொடர் உருவாகியுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இத்தொடரில் இளம் நடிகர்களான தித்யா சாகர் பாண்டே, சின்னி பிரகாஷ், விவேக் ஜோக்தாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் நாகேந்திர பிரசாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நவம்பர் 18 முதல் ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ள இத்தொடரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, ஒரு தனியார் மாலில், பொதுமக்கள் மத்தியில் கலைநிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவினில் பேசிய இயக்குநர் மிருதுளா ஸ்ரீதரன், “இந்த ஐடியா விதையாக இருந்த போதே எங்களை நம்பி வாய்ப்பளித்த, உடனிருந்து உருவாக்கிய ஜீ5 மற்றும் சிஜு சார் மற்றும் கௌஷிக் ஆகியோருக்கு நன்றி. இந்தத் தொடரில் உழைத்தக் குழுவினர் அனைவருக்கும் நன்றி” என்றார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி, “டான்ஸை வைத்து ஓடிடியில் எதுவுமே இல்லை. ஏனென்றால் டான்ஸை வைத்து உருவாக்குவது மிகக் கடினம். அதிலும் குழந்தைகளை வைத்து உருவாக்குவது அதை விடக் கடினம். ஆனால் விஜய் அதில் கைதேர்ந்தவராக இருக்கிறார். ஒரு பெண் குழந்தை தன்னுடைய உலகம் என்ன எனத் தேடி, வெளியே வந்து ஜெயிப்பதைப் பேசும், இந்தப் படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

இசையமைப்பாளர் சாம் CS, “123 படம் பார்த்தபோது இந்த மூன்று டான்ஸ் மாஸ்டர்களுடன் வேலை செய்ய வேண்டும் என நினைத்தேன் அது இப்போது நிறைவேறிவிட்டது. நான் வேலை பார்த்ததில் அதிகம் பேர் பார்த்தது லக்‌ஷ்மி படத்தின் மொராக்கோ சாங் தான். அதே போன்ற கதை கொண்ட இந்தப் படைப்பும் கண்டிப்பாக கவனம் ஈர்க்கும். எனக்கு வாய்ப்பு தந்ததற்கு விஜய் சாருக்கு நன்றி. ஜீ5 நிறுவனத்திற்கு நன்றி. இது வெறும் டான்ஸ் காம்பிடேஷன் பற்றிய படைப்பு மட்டுமல்ல, நிறைய உணர்வுகள் இதில் இருக்கிறது” என்றார்.

நடன இயக்குநர் நாகேந்திர பிரசாத், “இயக்குநர் விஜய் சார், சாம், கார்க்கி சார் மூவரும் திரைத்துறையில் எப்போதும் முன்னணியில் இருக்கும் கூட்டணி. அவர்களுடன் வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது ஆசீர்வாதம். விஜய் சார் இதனை அற்புதமாக இயக்கியுள்ளார். கிட்ஸ் உடன் நடனமாடியது சவாலாக இருந்தது” என்றார்.

நடன இயக்குநர் ராஜு சுந்தரம், “இந்த படக்குழுவினருக்கும் இயக்குநர் விஜய்க்கும் வாழ்த்துக்கள். நடனத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள தொடருக்கு ஆதரவு தந்த ஜீ5 க்கு நன்றி” என்றார்.

இயக்குநர் பாலா, “எனது உதவியாளர் மிருதுளா இந்தத் தொடரை இயக்கியுள்ளார். அவருக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள். இந்தத் தொடர் பார்க்க நன்றாக உள்ளது” என்றார்.

நடிகர் ஜீவா, “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட் – டான்ஸ் ஸ்டெப் . இதைப் புரிந்து கொள்ளவே எனக்கு ரொம்ப காலம் ஆனது. இந்தத் தொடரில் நிறையப் புதுமுகங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். பார்க்க மிகப் புதுமையாக இருக்கிறது. விஜய் சார் மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் விஜய், “பாலா சார் எனது மானசீக குரு. அவர் வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. இந்தத் தொடருக்கு மூன்று ஹீரோகள் பரேஷ் ஜீ, சாம் CS, மதன் கார்க்கி. மூவரின் பங்களிப்பும் அற்புதம். சந்தீப்பின் ஒளிப்பதிவு மிகத் தரமானதாக இருந்தது. பிரசன்னா JK, மிருதுளா ஸ்ரீதரன் மிகப்பெரும் உதவியாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி. குழந்தைகள் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். இந்த மாதிரி தொடர் இந்தியாவில் இது தான் முதல் முறை உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.