32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

நடிகர் ஆதி – இயக்குநர் அறிவழகன் இணையும் ‘சப்தம்’ திரைப்படம்

Dinesh R சேலம் Published: 15/12/2022 1 நிமிட வாசிப்பு Updated: 20/12/2022 சினிமா
எழுத்து அளவு:

தனது முதற்பட நாயகனான ஆதியை மீண்டும் நாயகனாக்கி, “சப்தம்” எனும் புதுப்படத்தை இயக்கித் தயாரிக்கிறார் இயக்குநர் அறிவழகன்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஆல்ஃபா ஃப்ரேம்ஸ் இயக்குநர் அறிவழகனும், 7ஜி ஃப்லிம்ஸ் சிவாவும் இணைந்து தயாரிக்க, டிசம்பர் 14 அன்று எளிமையான பூஜையுடன், சப்தம் படம் இனிதே துவங்கியது. ஈரம் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில், ரசிகர்களை உறைய வைக்கும் ஹாரர் த்ரில்லராக இப்படம் உருவாகவுள்ளது.

தமிழ்த் திரையுலகில் முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் இயக்குநர் அறிவழகன். த்ரில்லர் படங்களைத் தனக்கே உரிய தனித்த திரைக்கதையில் வெற்றிப்படங்களாக மாற்றிய அறிவழகன், தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தைத் துவங்கியுள்ளார். ஈரம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தில் பணியாற்றவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

 

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.