32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஹெச்.ராஜாவின் கிண்டலுக்குப் பதிலளித்த செளந்தர்ராஜா

Dinesh R சேலம் Published: 11/04/2018 1 நிமிட வாசிப்பு Updated: 11/10/2018 சினிமா
எழுத்து அளவு:

Soundarraja

சமீபத்தில் நடிகர் சங்கம் நடத்திய காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மற்றும் ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரி நடைபெற்ற அறப் போராட்டத்தில் பேசிய நடிகர் சத்தியராஜ், ‘இது இராணுவமே வந்தாலும் எதிர்கொள்ள தயங்காத கூட்டம்’ என்றார். அதனைத் தொடர்ந்து தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை தொடங்கப்பட்ட அன்றும், ‘தமிழர்கள் நாங்கள் இராணுவமே வந்தாலும் அதை எதிர்கொள்ள தயங்கமாட்டோம்’ என்று கோஷமிட்டனர். இதில் பாரதிராஜா, அமீர், வ. கௌதமன், வெற்றிமாறன், R.K. செல்வமணி, தங்கர் பச்சான் ஆகியரோடு நடிகர் ஆரியும் சௌந்தர்ராஜாவும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

Soundarraja tweet reply to H.Rajaஇதனைக் கொச்சைப் படுத்தும் விதமாக சௌந்தர்ராஜா காவல்துறையினர் மத்தியில் கைகூப்பிக் கொண்டிருந்த போட்டோவை வைத்து ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இதுதான் ராணுவத்திற்கே அஞ்சாத கூட்டம்’ என கிண்டல் செய்து உள்ளார்.

அதற்கு சௌந்தர்ராஜா, “என்ன சொல்ல, இது மெரினா போராட்டக் களத்தில் எடுத்த புகைப்படம். பெண்களைக் குழந்தைகளை அடிக்கவேண்டாம் என்று கேட்டபோது நிகழ்ந்தது. உங்க திறமை கண்டு வியகிறேன்! வாழ்க ஜனநாயகம். திருப்பி அடிக்கத் தெரியாம இல்ல அடிச்சா தாங்க மாட்டீங்க. வன்முறை தவறு அதனால் பொறுமை காத்தோம். மனிதநேயத்துடன்” எனப் பதிலளித்தார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.