Shadow

Tag: M.P.ஆனந்த்

அம்… ஆ விமர்சனம் | Am… aa review

அம்… ஆ விமர்சனம் | Am… aa review

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மலையாளப் படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு மொத்தம் 200 தயாரிப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கவந்தா எனும் மலைக்கிராமத்திற்கு, சாலை ஒப்பந்தக்காரரான ஸ்டீஃபன் வருகிறார். அந்தக் கிராமத்தில் ஒரு அம்மிணியம்மாவும், செவிப்புலன் திறன் கம்மியாக இருக்கும் அவர் பேத்தி குயிலியும் வசிக்கின்றனர். ஸ்டீஃபன் அவர்களைப் பற்றிக் கிராமத்தாரிடம் விசாரிக்க, யாருக்கும் அவர்கள் எங்கிருந்து அந்தக் கிராமத்திற்கு வந்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை. அந்த ஊரின் ரகசியங்களை அறிந்த கண் தெரியாத முதியவர் ஒருவர், அம்மிணியம்மாவைப் பற்றி விசாரித்தற்காக ஸ்டீஃபனைத் தாக்கவும் செய்கிறார். ஸ்டீஃபன் யார், அம்மிணியம்மா யார், குயிலி யார் என்று படத்தின் இரண்டாம பாதியில் முடிச்சவிழ்க்கின்றனர். குழந்தைக்காகத் தவம் கிடக்கும் அஞ்சு என்பவரின் அறிமுகத்திற்குப் பின் கவந்தாவிற்குச் செல்கிறது படம். முதல் ப...
அம் ஆ – மலையாளப் படத்து நாயகியாக தேவதர்ஷினி

அம் ஆ – மலையாளப் படத்து நாயகியாக தேவதர்ஷினி

சினிமா, திரைத் துளி
காபி ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், தாமஸ் செபாஸ்டியன் இயக்கத்தில், திலீப் போத்தன் மற்றும் தேவதர்ஷினி நடிப்பில் மனதை இலகுவாக்கும் அருமையான அன்பைப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள மலையாளப் படம் “அம் ஆ” ஆகும். இப்படத்தின் தமிழ்ப் பதிப்பு வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் படப்போஸ்டரை, மக்கள் செல்வன் விஜய் சேதிபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். மேலும் படம் வெற்றி பெறப் படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மலையாளத்தில் வெளிவந்து பெரும் பாராட்டுக்களைக் குவித்துள்ள இப்படம், திரையரங்குகளில் 60 நாட்களை வெற்றிகரமாகக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. விமர்சகர்கர்கள் மற்றும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் இப்போது தமிழில் வரவுள்ளது. ஒரு தாயின் பாசத்தைப் பேசும் இப்படத்தில், தமிழ் நடிகை தேவதர்ஷினி தாயாக...
Once Upon A Time In Madras விமர்சனம்

Once Upon A Time In Madras விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தன் வீட்டு மரத்து மாங்காயை அடித்துத் தின்ற சிறுவனைத் துப்பாக்கியில் சுடுகிறார் ஒரு முன்னாள் இராணுவ வீரர். வழக்கிற்கு அஞ்சி, அந்தத் துப்பாக்கியைக் கூவத்தில் வீசி எறிகிறார். அந்தத் துப்பாக்கி, யார் யார் கைகளில் கிடைக்கிறது, அவர்கள் வாழ்வில் என்ன நேருகிறது என்பதுதான் படத்தின் ஒரு வரிக்கதை. நான்கு கதைகளை இணைக்கும் hyperlink ஆகப் படத்தின் திரைக்கதை பயணிக்கிறது. மகளாகப் பருவ மாற்றம் அடையும் மகனைப் பெற்ற தாயிடமும், அரசியல் கொலை புரியும் கொலைக்காரன்க்கு உடந்தையாக இருக்கும் ஓட்டுநரிடமும், டொமஸ்டிக் வயலன்ஸிற்கு உள்ளாகும் புது மருமகளிடமும், சாதிவெறி பிடித்த பத்திரிகையாளரிடமும் துப்பாக்கி கிடைக்கிறது. படத்தின் முதற்பாதி, கோர்வையற்ற காட்சிகளாக நகர்ந்து இடைவேளையில் ஆவலைத் தூண்டும் விதமாக முடிகிறது. இரண்டாம் பாதியின் முடிவில் எல்லாக் கதைகளும் ஒரு நேர்க்கோட்டில் இணைந்து திருப்திக்கரமாகப் படம் முடிகிறது....
“துருவ நட்சத்திரம் வெளியீட்டில் சிக்கல் ஏன்?” – தயாரிப்பாளர் கே. ராஜன் | எமகாதகன்

“துருவ நட்சத்திரம் வெளியீட்டில் சிக்கல் ஏன்?” – தயாரிப்பாளர் கே. ராஜன் | எமகாதகன்

சினிமா, திரை விமர்சனம்
சிங்கப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணமணி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கிஷன்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'எமகாதகன்' ஆகும். பிரைம் ரீல்ஸ் நிறுவனம் வழங்கும் இந்தப் படத்தில் கதாநாயகர்களாக கார்த்திக் மற்றும் மனோஜ் நடிக்க ரஷ்மிகா திவாரி கதாநாயகியாக நடித்துள்ளார். ‘வட்டகரா’ சதீஷ் வில்லனாக நடிக்க அனுஷ்கா மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் எமகாதகன் படக்குழுவினருடன், சிறப்பு விருந்தினர்களாக நடிகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் திருமலை, நடிகர் சௌந்தர்ராஜன் மற்றும் இயக்குநர் சரவணசக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் கே.ராஜன், “இன்றைக்கு எத்தனையோ சின்ன பட்ஜெட் படங்கள் தயாராகி சென்சார் சான்றிதழ் பெற்றும் கூட ரிலீஸ் ஆக முடியாமல் தவிக்கின்றன. மிகப் பெரிய படமான து...
“சென்சார் செய்யப்பட்ட படங்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் மானியம் வழங்கவேண்டும்” – எஸ்.வி.சேகர் | எமகாதகன்

“சென்சார் செய்யப்பட்ட படங்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் மானியம் வழங்கவேண்டும்” – எஸ்.வி.சேகர் | எமகாதகன்

சினிமா, திரைச் செய்தி
சிங்கப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணமணி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கிஷன்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'எமகாதகன்' ஆகும். பிரைம் ரீல்ஸ் நிறுவனம் வழங்கும் இந்தப் படத்தில் கதாநாயகர்களாக கார்த்திக் மற்றும் மனோஜ் நடிக்க ரஷ்மிகா திவாரி கதாநாயகியாக நடித்துள்ளார். ‘வட்டகரா’ சதீஷ் வில்லனாக நடிக்க அனுஷ்கா மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் எமகாதகன் படக்குழுவினருடன், சிறப்பு விருந்தினர்களாக நடிகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் திருமலை, நடிகர் சௌந்தர்ராஜன் மற்றும் இயக்குநர் சரவணசக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நடிகர் எஸ்.வி.சேகர், “வெற்றிகரமான மனிதர்களை எமகாதகன் என சொல்வது உண்டு. அந்த வகையில் இந்தப் படத்தின் டைட்டில் நெகட்டிவ் ஆக இல்லாமல், அதே சமயம் அனைவரும் புழங்கக...
நாடு விமர்சனம்

நாடு விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
‘எங்கேயும் எப்போதும்’,  ‘ இவன் வேற மாதிரி’  போன்ற  திரைப்படங்களை இயக்கிய  சரவணன் இயக்கத்தில் தர்ஷன், மகிமா நம்பியார், சிங்கம் புலி, ஆர்.எஸ்.சிவாஜி ஆகியோர் நடிப்பில் இந்த வாரம் வெளியாக இருக்கும் திரைப்படம் “நாடு”.  மருத்துவர் ஒருவர் இல்லாமல் சொல்லொன்னா துன்பத்திற்கு உள்ளாகும் மலைவாழ் கிராம மக்கள், இறுதியாகத் தங்கள் கிராமத்திற்கு வரும் ஒரு பெண் மருத்துவரைத் தங்கள் கிராமத்தில் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் போராட்டமே இந்த “நாடு” திரைப்படம். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைத் தொடரில் இருக்கும் ஒரு மலைவாழ் கிராமத்தின் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால்,  உயிரிழப்புகள் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அந்த மலைக்கிராமத்திற்கு நியமிக்கப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும்  ஒரு வாரம் அல்லது ஒரு மாத காலத்திற்குள் மாற்றல் வாங்கிக் கொண்டு கிளம்பிவ...
தீபாவளிக்கு வெளியாகும் ஆரியின் ‘பகவான்’

தீபாவளிக்கு வெளியாகும் ஆரியின் ‘பகவான்’

சினிமா, திரைத் துளி
பிக்பாஸ் மூலம் மக்களின் இதயங்களை வென்ற நடிகர் ஆரி அர்ஜுனன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் பகவான் திரைப்படத்திற்காக மிகப் பிரமாண்டமான பாடல் காட்சி, கலா மாஸ்டர் நடன அமைப்பில் படமாக்கப்பட்டுள்ளது. இயக்குநர் காளிங்கன் இயக்கத்தில் AMMANYA MOVIES சார்பில் C.V. மஞ்சுநாதா தயாரிக்கும் மித்தாலஜிகல் திரில்லர் திரைப்படம் “பகவான்”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியானபோதே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதுவரையிலும் தோன்றியிராத வகையில் வித்தியாசமான தோற்றத்தில் இப்படத்தில் ஆரி அர்ஜுனன் நடித்திருக்கிறார். ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் பரபர திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்திற்காக, கலா மாஸ்டர் நடன அமைப்பில், மிகப் பிரம்மாண்ட பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இப்பாடலுகென்றே 3 நாட்கள் பிரத்யேகமாக பயிற்சிகள் எடுத்துக் கொண்டு பாடல் காட்சியில் பங்கேற்று...
கூல் சுரேஷின் ‘சித்திரமே சொல்லடி’

கூல் சுரேஷின் ‘சித்திரமே சொல்லடி’

சினிமா, திரைத் துளி
'சித்திரமே சொல்லடி' எனுன் திரைப்படத்தை, எம்.ஜி.எம் ப்ரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் கௌரி சங்கர் தயாரித்து இயக்குகிறார். இப்படத்தில் கூல் சுரேஷ் கதாநாயகனாகவும், கோபிகா நாயர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் தெனாலி, மகாநதி சங்கர், தேனி முருகன், விஜய் கணேசன், சுமதி, அஞ்சலி டேவி, அப்சர் மற்றும் பெரெரொ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஒளிப்பதிவை மகி பாலனும், ஒலிப்பதிவை ஆதிஷ் உத்ரியனும் செய்துள்ளனர். துப்பறியும் பாணியில் உருவாக்கபட்டுள்ள இப்படம் சென்னை, ஏலகிரி மற்றும் பாண்டிசேரி ஆகிய பகுதிகளில் படமாக்கப் பட்டுள்ளது. நவம்பர் மாதம் படத்தைத் திரைக்குக் கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படத்தைப் பற்றி இயக்குநர் கௌரி சங்கர் கூறுகையில், “இந்தப் படம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம். பெண்கள் பாலியல் தொல்லைகளிலிருந்தும், தங்களை கேலி...
ஹெச்.ராஜாவின் கிண்டலுக்குப் பதிலளித்த செளந்தர்ராஜா

ஹெச்.ராஜாவின் கிண்டலுக்குப் பதிலளித்த செளந்தர்ராஜா

சினிமா, திரைத் துளி
சமீபத்தில் நடிகர் சங்கம் நடத்திய காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மற்றும் ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரி நடைபெற்ற அறப் போராட்டத்தில் பேசிய நடிகர் சத்தியராஜ், ‘இது இராணுவமே வந்தாலும் எதிர்கொள்ள தயங்காத கூட்டம்’ என்றார். அதனைத் தொடர்ந்து தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை தொடங்கப்பட்ட அன்றும், ‘தமிழர்கள் நாங்கள் இராணுவமே வந்தாலும் அதை எதிர்கொள்ள தயங்கமாட்டோம்’ என்று கோஷமிட்டனர். இதில் பாரதிராஜா, அமீர், வ. கௌதமன், வெற்றிமாறன், R.K. செல்வமணி, தங்கர் பச்சான் ஆகியரோடு நடிகர் ஆரியும் சௌந்தர்ராஜாவும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைக் கொச்சைப் படுத்தும் விதமாக சௌந்தர்ராஜா காவல்துறையினர் மத்தியில் கைகூப்பிக் கொண்டிருந்த போட்டோவை வைத்து ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இதுதான் ராணுவத்திற்கே அஞ்சாத கூட்டம்’ என கிண்டல் செய்து உள்ளார். அதற்கு சௌந்தர்ராஜா, “என்ன சொல்ல, இது மெரினா போர...