32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

அமேசான் 2024: ப்ரைம் வீடியோவின் புது வெளியீடுகள்

Dinesh R சேலம் Published: 20/03/2024 2 நிமிட வாசிப்பு Updated: 21/03/2024 OTT
எழுத்து அளவு:

ப்ரைம் வீடியோ, 2023 ஆம் ஆண்டை மிகப்பெரிய அளவில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. 2024 இற்கான, கிட்டத்தட்ட 70 தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டது ப்ரைம் வீடியோ. அவற்றில் பெரும்பாலானவை அடுத்த 2 ஆண்டுகளில் வெளியிடப்படும். 40 ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட 29 திரைப்படங்களுடன் கூடிய இந்தப் புதிய பட்டியல் இந்தியாவின் தலைசிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்கு உத்திரவாதமளிக்கிறது. வெளியிடப்படவிருக்கும் நிகழ்ச்சிகளின் தலைப்புக்கள் குறித்த விவரங்கள்:

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ப்ரைம் வீடியோவின், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் ஹெட் ஆப் ஒரிஜினல்ஸ், அபர்ணா புரோஹித், “பிரைம் வீடியோவில், மொழியியல் மற்றும் புவியியல் எல்லைகளுக்கும் அப்பால் பயணிக்கும், ஒரு மாறுபட்ட, உண்மையான மற்றும் இந்தியாவில் வேரூன்றிய கதைகளைக் காட்சிப்படுத்துவதற்கான உலகளாவிய மையமாக இருப்பதே எங்களின் தொடர்ந்த இயக்கச் செயல்பாடாக இருக்கிறது” என்று கூறினார். மேலும், “2023 ஆம் ஆண்டில் மட்டும் மொத்த 52 வாரங்களில் 43 வாரங்களில், எந்தவொரு வார காலத்திலும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் எங்கள் நிகழ்ச்சிகளின் உள்ளடக்கம் கண்டு களிக்கப்பட்டு உலகளவில் ப்ரைம் வீடியோவில் முதல் 10 இடங்களைப் பெற்றுப் பிரபலமடைந்தது. தேசிய மற்றும் உலகளவில் எங்கள் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தைக் காண்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், இந்திய உள்ளடக்கத்தை உலக அரங்கில் வெற்றி வாகைசூடச் செய்ய எங்களுக்கு மென்மேலும் உத்வேகம் அளிக்கிறது. கதாசிரியர்கள் மற்றும் திறமையாளர்களுக்கான ஒரு இல்லமாக, இந்திய பொழுதுபோக்குத் துறையைச் சார்ந்த சில சிறந்த திறமையாளர்களின் கூட்டாளியாக இருப்பதில் நாங்கள் மேலும் உற்சாகமடைந்துள்ளோம். மற்றும் புத்தம் புதிய, வலிமையான, மன எழுச்சியை அளிக்கவல்ல மற்றும் பொழுபோக்கு அம்சங்கள் நிறைந்த கதைகளைப் படைப்பதற்கான ஓர் ஆற்றல்மிக்க, புதிய கருத்துக்களுக்கு அதிகாரமளிக்கிறோம். எதிர்வரவிருக்கும் எங்களின் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் இந்தியாவில் இருந்து அழுத்தமான கதைகள் மென் மேலும் அதிகமான எண்ணிக்கையில் வெளிவர வழி வகுக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்றார்.

பாதாள லோகம் 2, ஃபேமிலி மேன் 3, சுழல் 3, பஞ்சாயத்து 3, மிர்சாபூர் 3, டான் 3, அக்னி, கேம் சேஞ்சர், சிட்டாடெல், ஸ்னேக்ஸ் & லேடர்ஸ், கேங்ஸ் – குருதிப்புனல், மற்றும் ஹோம்பாவா ஃப்லிம்ஸ், ஸ்டுடியோ க்ரீன் படங்கள், கங்குவா, காந்தாரா, ஃபார்ஸி, அரேபியக் காதலி என அமேசானின் புது வெளியீடுகள் எனைத்துமே எதிர்பார்ப்பைத் தூண்டும் வண்ணமுள்ளன.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.