Shadow

அம்மண அம்மண தேசத்தில – பாடல்

“கொலை விளையும் நிலம் – ஆவணப்படத்தின் மூலம் சமீபத்தில் தனுஷ் அவர்கள் கரங்களால் 125 பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு நிதி உதவி கிடைத்திருக்கிறது. இன்னும் பலர் உதவிகள் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

அத்தனைக்கும் காரணம் ஊடக நண்பர்கள் தான். ஓர் ஆவணப்படம் தானே என்பதைத் தாண்டி அது பேசிய விஷயத்துக்காகவே பெரிய அளவில் கொண்டு சேர்த்துவிட்டீர்கள். அதற்காக நானும் எனது படக்குழுவும் என்றைக்கும் கடமைப்பட்டிருக்கிறோம். “

இயக்குநர் ராஜீவ் காந்தி

ஜீ.வி. பிரகாஷின் ஆக்ரோஷமான இசையில், ராஜூ முருகன் அண்ணனின் கோப வரிகளில் உருவாகி, கொலை விளையும் நிலம் ஆவணப்படத்தில் இடம்பெற்ற அம்மண தேசம் பாடலை இன்று காலை 10 மணிக்கு இயக்குநர் பாண்டிராஜ் அவர்கள் ட்விட்டரில் வெளியிட்டார்.