Shadow

சிரிக்கச் செய்வார் ஆனந்த்ராஜ்

iravukku aayiram kangal

அருள்நிதி – மஹிமா நம்பியார் நடிக்கும் திரைப்படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’.

அறிமுக இயக்குநர் மு.மாறன் இயக்கும் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக நடிகர்கள் அஜ்மலும் ஆனந்தராஜும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் ஜி.டில்லி பாபு தயாரித்து, விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இந்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி அன்று ஆரம்பமாக இருக்கின்றது.

“ஆனந்தராஜ் சாரின் கதாபாத்திரம் எங்கள் படத்தின் கதைக்கு மேலும் பலம் சேர்க்கும். அவரின் உடல் பாவனைகளும், வசனங்களும் நிச்சயமாக ரசிகர்களை வாய்விட்டுச் சிரிக்கச் செய்யும். அருள்நிதி சார் – அஜ்மல் – ஆனந்தராஜ் சார் ஆகியோரின் இந்தப் புதிய கூட்டணி, நிச்சயமாக ரசிகர்களின் உள்ளங்களை வெல்லும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் இயக்குநர் மு மாறன்.