Actress Albumசாந்தினி – ஆல்பம்
[Show slideshow]
செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

[Show slideshow]

ஒரே ஓர் அட்டகாசமான கதை போதும் – நீங்களும் பயங்கரவாதி தான். கதை கூட வேண்டாம். அதிகார வர்க்கம் யாரை வேண்டுமானாலும் குற்றவாளியெனச் சுலபமாக அடையாளப்படுத்தும். அப்படி அதிகார வர்க்கத்தால் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்படும் வீடற்ற பிளாட்ஃபாரவாசிகள் (பூங்காவாசிகள்) நால்வர் பற்றிய படமிது. நிரபராதிகளான அந்நால்வரும் முதலில் ஆந்திரக் காவல்துறையினரிடம், பின் தமிழகக் காவல்துறையினரிடம் சிக்கிப் சின்னாபின்னமாகின்றனர். அதிகாரம் – ஜாதி, இன, மத, மொழி, “வர்க்கம்” என எந்த வேற்றுமையும் பாவிக்காது. தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எந்த […]

த்ரில்லர் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு என்றுமே ஆர்வம் இருக்கும். கொலைக்காரன் யாரென்று தெரியாமல், இவனாக இருக்குமோ, அவனாக இருக்குமோ என்று ரசிகர்களை யூகிக்க வைப்பதே இயக்குநர்களுக்கு பெரும் சவால். அத்தகைய படங்களில் ஒன்றுதான் சவாரி. ரசிகர்களை நாற்காலியின் நுனியில் உட்கார வைக்கும் தகுதி படைத்த படங்கள் என்றுமே வெற்றி பெரும். இந்தப் படத்தின் பலமாக இது அமையும். அறிமுக இயக்குநர் குகன் சென்னியப்பன் கூறும் போது, ‘இன்றைய காலகட்டத்தில் நமக்கு எதிலும் வேகம், எல்லாவற்றிலும் வேகம். படம் […]

எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வார் இங்கிலீஷ் டீச்சர் மலர், ஆனா குடிக்காரர்களை மட்டும் எந்த ஜென்மத்துக்கும் மன்னிக்கவே மாட்டார். தனக்குக் குடிப்பழக்கம் உள்ளதை மறைத்து, மலரைக் காதலித்து மணம் புரிந்து கொள்கிறார் தமிழாசிரியர் அ.சிவக்குமார். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. ‘உள்ளொற்றி உள்ளுர்..’ எனத் தொடங்கும் குறளில் இருந்து படம் தொடங்குகிறது. நாயகனின் குணத்தை விளக்க இக்குறளை உபயோகப்படுத்தியுள்ளனர். சின்னஞ்சிறு பட்ஜெட் படம். இயக்குநர் அண்ணன் செந்தில்தல்ராஜாவுக்காக அவரது M.G.ராஜாவே தயாரித்துள்ளார். முடிந்தளவு இழுத்துப் பிடித்துப் […]

மறவர் குலத்தைச் சேர்ந்த குமரனைக் கொல்ல முயல்கின்றனர். அவனது காதலி புது மலரின் தாய் மாமனைக் கொன்று விடுகின்றனர். அதனாலெழும் சிக்கல்களைச் சமாளித்து நாயகன் குற்றவாளியை எப்படிக் கண்டுபிடிக்கிறான் என்பதுதான் படத்தின் கதை. படத்தின் தலைப்பைக் கொண்டே படம் நடக்கும் களம் ராமநாதபுரம் என யூகிக்கலாம். வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் முத்துராமலிங்கத் தேவரை வழிபட உதவியதே அன்றி, களம் கதைக்கு உதவவில்லை. சம்பிரதாயமான முறையில் கதாபாத்திர அறிமுகங்கள் முடிந்தும், படத்தின் முதற்பாதி இலக்கற்றே பயணிக்கிறது. நாயகன், நாயகிக்கிடையேயான […]

இயக்குநர் வெற்றிமாறன் தொடங்கி வைத்தார்.

சூது கவ்வும் படத்தின் கதைக்கு எதிர் திசையில் இப்படத்தின் கதையை அமைத்து அப்படத்தின் சாயல் இப்படத்தில் இல்லாதவாறு குடும்பத்தில் உள்ள அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கியுள்ளனர். ‘காதலும் கடந்து போகும்’ ஒரு காதல் கலந்த காமெடி படம். முழுக்க காதல் கலந்த நகைச்சுவைப் படம் என்பது தமிழ் சினிமாவில் மிகவும் அரிது. ஒன்று நகைச்சுவை அதிகமாக இருக்கும் இல்லையென்றால் காதல் கலந்த காட்சிகள் அதிகமாக இருக்கும். இப்படத்தில் இறுதிக் காட்சிகளுக்கு முன்பு வரை காட்சிகளோடு […]

[Show slideshow]

மாயலோகத்தில்.. விந்தனின் இயற்பெயர் கோவிந்தன். இவர் 1916இல் செங்கல்பட்டு மாவட்டம், நாவலூர் என்கிற சிறிய ஊரில் பிறந்தார். வறுமையான குடும்பச் சூழ்நிலை. நடுநிலைப் பள்ளியைக் கூடத் தாண்டாத பருவத்தில், பிழைப்புக்காகத் தனது தந்தையுடன் சிறியச் சிறிய வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சில காலம் சென்ற பின், இரவுப் பள்ளியிலும், தொடர்ந்து ஓவியக் கல்லூரியிலும் சேர்ந்து ஓவியமும் கற்கத் தலைப்பட்டார். ஆனால் வறுமை அவரைத் துரத்தியது. பாதியிலேயே விட்டுவிடும்படியாகவும் ஆகிவிட்டது. ஓர் அச்சகத்தில் அச்சுக் கோர்க்கும் […]


அருந்ததி அதிரடியாக அசத்தும் புதிய படம் அர்த்தநாரி. இந்தப் படத்தை இயக்கியுள்ளவர் சுந்தர இளங்கோவன். இயக்குநர் பாலாவிடம் அசோசியேட் இயக்குநராகப் பணியாற்றியவர் இவர். அர்த்தநாரி படத்தைப் பற்றி உற்சாகமாகப் பேசும் அருந்ததி, “அர்த்தநாரி படம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த ஒரு முழுமையான ஆக்க்ஷன் படம். அந்த உண்மைச் சம்பவங்கள் எனக்குப் பர்சனலாகவே மிகவும் உத்வேகம் அளித்தன” என்கிறார். அவர் ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘தொட்டால் தொடரும்’ முதலிய படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. “இதில் […]

நாயகனின் பெயரைக் கூட மாற்றாமல் முரளி என்றே வைத்து, மிக மிகச் சின்னஞ்சிறு மாற்றங்களுடன் அரண்மனையையே அரண்மனை-2 ஆக்கி விட்டுள்ளார் சுந்தர்.சி. முரளியின் வீட்டில் அமானுஷ்யனான சம்பவங்கள் நிகழ்கின்றன. தனது மாமன் மகன் ரவியின் உதவியுடன் அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதுதான் படத்தின் கதை. முந்தைய அரண்மனையை விட, இப்படம் சகல விதத்திலும் சிறப்பாய் உள்ளது. ஆனால், அதே திரைக்கதை என்பதால் பார்த்த படத்தையே பார்க்கும் அசுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. பழி வாங்க நினைக்கும் மாயா ஏன் இறக்கிறாள் […]

(முக்கிய நடிகர்கள்: பி.யு.சின்னப்பா, என்.எஸ்.கிருஷ்ணன்; டி.எஸ்.பாலையா; எம்.எஸ்.சரோஜினி; டி.ஏ.மதுரம்; எம்.ஆர்.சந்தானலட்சுமி) 1940-களில் தொடர்ந்து படங்களை உருவாக்கி வந்த மிகச்சிறந்த சினிமா தயாரிப்பு நிறுவனங்களான சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ், ஜெமினி, ஏவி.எம்., ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனங்களுக்கு நிகராகப் பேசப்பட்ட மற்றொரு சினிமா படத்தயாரிப்பு நிறுவனம் கோயம்புத்தூரிலிருந்து இயங்கி வந்த பக்ஷிராஜா ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனம். ஆரம்பத்தில் இதன் உரிமையாளர்கள் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு என்பவரும் சேலம் நாராயண அய்யங்கார் என்பவரும் ஆவர். இந்த நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளாக சிவகவி (1943), […]

(பெரிதாகக் காண படத்தைச் சொடுக்கவும்)

நான்கு பேர் நான்கு விதமாகப் பேசுவார்களே என்ற தயக்கத்தாலேயே சிலர் எக்காரியத்தையும் முயற்சி செய்ய மாட்டார்கள். ஆனால், இயக்குநர் L.மாதவனுக்கு அப்படி எந்தத் தயக்கமும் இல்லை என்பது மட்டும் திண்ணம். மிகத் தைரியமாகஒரு ‘குறி’ப்பிட்ட அவஸ்தையைப் படமாக்கியுள்ளார். . அழுக்கனுக்கு அஞ்சு பணம் செலவு என்பார்கள். அப்படித்தான் செலவினத்தைக் குறைக்க நினைக்கும் சரவணனும், அதனாலேயே ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறான். அதிலிருந்து மீண்டு அவன் விரும்பிய பெண்ணை மணந்து கொள்கிறானா இல்லையா என்பது தான் படத்தின் கதை. படத்தின் […]
தேடலை தொடங்க குறைந்தபட்சம் 3 எழுத்துக்களை தட்டச்சு செய்யவும்.
உங்கள் ஊர், கிராமம் அல்லது பகுதியில் நடந்த சம்பவங்கள், விபத்துக்கள், திருவிழாக்கள் அல்லது பொதுப் பிரச்சனைகளை எமது செய்திப் பிரிவுக்கு உடனே பகிருங்கள்.
முக்கிய பிரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் உங்கள் திரையில் பெற அனுமதி வழங்கவும்.
