32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

அதர்வாவின் பூமராங் – இயக்குநர் கண்ணன்

Dinesh R சேலம் Published: 13/06/2018 2 நிமிட வாசிப்பு Updated: 14/06/2018 சினிமா
எழுத்து அளவு:

Boomerang director Kannan

“பூமராங் படத்தின் திரைக்கதையை எழுதி முடித்தவுடனேயே, படத்தை முடிக்க 90 நாட்கள் தேவைப்படும் என்று தெளிவாகத் தெரிந்தது. மேலும் மிக அதிகமான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டோம். 4 வெர்சன் திரைக்கதை இருந்தது, ஒரு நாளைக்கு 2 காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டிருந்தோம். அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா ஆகியோரின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் 45 நாட்களில் படப்பிடிப்பை முடிப்பது சாத்தியமில்லாத ஒன்றாக மாறியிருக்கும்” என்றார் இயக்குனர் கண்ணன்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மேலும், “முழுப் படமும் அதர்வாவைச் சார்ந்தது. அவரிடம் இருந்து 3 வித்தியாசமான தோற்றங்கள் இந்தப் படத்துக்குத் தேவைப்பட்டது. புரோஸ்தடிக் மேக்கப் செயல்முறையின் போது மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார். மிகச்சிறந்த புரோஸ்தடிக் ஒப்பனைக் கலைஞர்களான ப்ரீத்தி ஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிஸோசா 12 மணி நேர உழைப்பிற்குப் பிறகு அதர்வாவுக்குச் சிறந்த, சரியான தோற்றத்தைக் கொண்டு வந்தனர்” என்றார் இயக்குநர் கண்ணன்.

ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் சென்னை, அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. அந்தமான் தீவில் ஒரு சில பகுதிகளில் ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இயக்குநர் கண்ணன் தன் வழக்கப்படி, தனக்கு நெருக்கமான ஒரு தமிழ்த் தலைப்பை வைக்க தான் திட்டமிட்டிருந்தார். பின் பூமராங் என்ற தலைப்புப் படத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து இந்தத் தலைப்பை வைத்திருக்கிறார். பாலிவுட் நடிகர் உபென் படேல் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கும், அதர்வாவுக்கும் இடையில் நடக்கும் மோதல் காட்சிகள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன என்று மகிழ்ச்சியாக உள்ளனர் படக்குழு.

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் 60 நாட்கள் கால அளவில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது, ஆகஸ்ட் மாதம் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாசினி மணிரத்னம் மற்றும் பல முக்கியமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். படத்தை மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பிலும் இணைந்துள்ளார் கண்ணன்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.