
கணினி ஆய்வில் தமிழ் – 06
கணினி ஆய்வில் தமிழ் - 05சென்ற வாரம் தேடு பொறியின் ஆன்லைன் செயல்பாடுகளைப் பற்றி பார்த்தோம்.இவ்வாரம் ஆஃப்லைன் செயல்பாடுகள் பற்றி பார்ப்போம்.பின் வருவன ஆஃப்லைன் செயல்பாடுகள் ஆகும்.வலைத்தளங்களை கிரால் (Crawl) செய்தல் வேண்டும் .இதை செய்யும் நிரலிக்கு "கிராலர் (Crawler)" என்று பெயர்.கிரால் செய்யப்பட்ட வலைத்தளங்களின் உள்ள இமேஜ், எழுத்துமூலம் உள்ள செய்திகள் போன்றவற்றை பிரித்து ஒவ்வொன்றிற்கும் ஆவணங்கள் அடிப்படையில் ஐ.டிக்கள் (IDs) கொடுக்கப்படும். பின் வரும் செயல்பாடுகள் இந்த ஐ.டியை வைத்தே செயல்படும் .
வலைத்தளங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இமேஜ் மற்றும் செய்திகளில் உள்ள முக்கியமானவற்றை இன்டெக்ஸ் செய்வார்கள். உதராணத்திற்கு "இந்தியா" என்கிற வார்த்தை அல்லது இமேஜ் d1,d4 d50,d1000 முதலிய வலைத்தளங்களில் / ஆவணங்களில் உள்ளது என குறித்து வைப்பார்கள் . d1,d4... என...








