மகளிர் மருத்துவ உள்நோக்கியியல் மாநாடு
எண்டோஸ்கோப்பி என்பதன் தமிழாக்கமே ‘உள்நோக்கியியல்’ எனும் பதமாகும்.
பெண்ணின் வயிற்றினில் உள்ள குடல், பித்தப்பை, கர்ப்பப்பை, சினைமுட்டைப்பைக் கருக்குழாய்கள் போன்ற அனைத்து உறுப்புகளையும் சிறுதுளை மூலம் பார்க்கவும், தேவையானால் அறுவைச் சிகிச்சை செய்யவும் முடியும். கடந்த 40 வருடங்களில் மின்னல் வேகத்தில் பரவியுள்ள மிகச் சிறந்த மருத்துவமுறை இந்த உள்நோக்கியியல் என்று சொல்வது மிகப் பொருந்தும். சமீபத்தில் 87 வயது மூதாட்டிக்கு லேப்ராஸ்கோப்பி மூலம் கருப்பை மற்றும் சினைமுட்டைப்பையில் உள்ள புற்றுநோய் அகற்றப்பட்டது என்று ஜப்பான் பெருமையுடன் கூறிக் கொள்கிறது.
இந்திய மகளிர் உள்நோக்கியியல் கழகம் இரண்டாயிரத்து ஐந்நூறு சிறப்பு மருத்துவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில், இந்தக் கழகத்தின் முதல் அகில இந்திய மகாநாடு 30/3/2018 முதல் 3 நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறுகிறது. மகாநாட்டில...