‘தி பார்க், சென்னை (THE Park, Chennai)’ நட்சத்திர விடுதியில், 2002 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் 601 பல்வகை உணவுக்கூடம் (Multicuisine Restaurant), புத்தம் புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தி அசத்தி வருகிறது. விரைவாகவும் இலகுவாகவும் ஜீரணமாகும் மதிய உணவாகட்டும் அல்லது நிதானமாக உண்டு களைப்பாற முற்படும் இரவு உணவாகட்டும், அனைத்திற்குமே ஏற்ற வகையில் உணவு வகையறாக்கள் இங்கே உண்டு. கலையும் கற்பனையும் கலந்த கலவையாக இங்குத் தயாரிக்கப்படும் உணவு வகைகள் கண்ணுக்கும் கருத்திற்கும் விருந்தளிப்பதோடு நாவின் சுவைக்கும் நல்விருந்தளிக்கும். ஆர்வமும் நேர்த்தியும் திறமையும் மட்டுமே துணையாகக் கொண்டு, Executive Chef, Ashutosh Nerlekar-உம், அவரது குழுவினரும், சைவ உணவினருக்கும், அசைவ உணவினருக்கும் அற்புதமான பிரத்தியேக மெனுவைத் தயாரித்துள்ளனர்.
தற்போது, 601 இல், சீனப் பாரம்பரிய உணவான டிம் ஸம் (Dim Sum) மற்றும் ஜப்பானியப் பாரம்பரிய உணவான சூஷி (Sushi) போன்ற புதிய உணவு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பார் (Bar) அமைப்பில் அமைக்கப்பட்டுள்ள இவ்வுணவுக்கூடத்தில், உங்கள் கண்கள் முன்பாகவே சமைத்து, சுடச்சுட ஃப்ரெஷாகவும் சுவையுடனும் அளிக்கின்றனர். இவ்விடத்தில் உள்ள உயரமான பார் ஸ்டூல் இருக்கைகள், சிறந்த தனி உணவு, சூஷி, டிம் ஸம் மாஸ்டர்களுடன் வேடிக்கையான கலந்துரையாடல்களுக்குச் சிறந்த இடமாக அமைகிறது.
புதுவிதமான உணவுகளைச் சுவைக்க விரும்புவர்கள் கட்டாயம் சென்று முயற்சி செய்யவேண்டிய உணவுகளாக அவையுள்ளன. சைவம், அசைவம் என இரண்டு வகையிலும் அவ்வுணவுகள் தயாரிக்கப்படுவது சிறப்பு அம்சமாகும்.
டிம் ஸம் பார்க்க மோமோ’ஸ் போல் இருந்தாலும், மோமோ’ஸ் மைதாவில் செய்யப்படுகிறது. சீன உணவான டிம் ஸம்மோ, உருளைக்கிழங்கு மற்றும் கோதுமையின் ஸ்டார்ச்சில் (மாச்சத்து) செய்யப்படுகிறது.
சூஷியிலும் சைவ வகைகள் கிடைக்கின்றன. அசைவத்தில், சமைக்காத ஃப்ரெஷ் மீனை இடையே வைத்துத் தருகின்றனர். நமக்கு அப்படிச் சமைக்காமல் சாப்பிடுவது பரிச்சயம் இல்லாவிட்டாலும், ஒருமுறை முயன்றால் பிடிக்கத் தொடங்கிவிஉம் என்கிறார் செஃப் வேய்னே. மேலும், உடல்நலத்திற்கு எந்தக் கேடும் செய்யாத மிகப் பாதுகாப்பான உணவு எனவும் உறுதியளிக்கிறார்.
டிம் சம் & சுஷி பார், திங்கள் முதல் ஞாயிறு வரை மதிய உணவு மற்றும் இரவு உணவிற்குத் திறந்திருக்கும்.
முன்பதிவிற்கு: 044 42676000 | 9962288601