32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“நடனமும் நடிப்பும் என் உயிர்” – அனுஷா

Dinesh R சேலம் Published: 10/08/2017 2 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

Anusha Nair

மூன்றாவது வயதிலேயே காலில் சலங்கை கட்டி நடனமாடியவர் அனுஷா நாயர். கேரளாவில் இயற்கை எழில் நிறைந்த ஆலப்புழாவில் பிறந்து பெங்களூரில் படித்து வளர்ந்தவர் அனுஷா நாயர். பிரபலமான மலையாள டெலிஃபிலிம்களிலும் கதாநாயகியாக வலம் வரவே, சுரேஷ்கோபி ஹீரோவாக நடித்த ‘தாவளம்’ படத்தில் நெடுமுடி வேணுவின் மகளாகச் சிறந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்து தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். இதுவே அனுஷா நாயருக்குத் தமிழில் வாய்ப்புக் கிடைக்கக் காரணமாய் அமைந்தது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அனுஷா நாயர், ‘மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி’ படக்குழுவினர்களின் கண்ணில் பட அவர்களது அடுத்த படமான, ‘சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி’ யில் மாலினி என்று பெயரை மாற்றி கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். அதைத் தொடர்ந்து மலையாளத்தில் பகத் ஃபாசில் நடித்த ‘அன்னயும் ரசூலும்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். தமிழில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காததால் நடனத்தில் கவனத்தைச் செலுத்தினார். பரதம், குச்சுப்புடி நடனத்தில் தேர்ச்சி பெற்று மேடை நடனத்தில் கவனம் செலுத்தி வந்தவருக்கு பிரபல மலையாள இயக்குநர் ராஜீவ் ரவியிடமிருந்து மீண்டும் நடிக்க அழைப்பு வர, மேடை நடனத்துடன் சினிமாவிலும் கவனம் செலுத்தத் தயாராகி விட்டார் அனுஷா நாயர்.

Dancer Anusha Nairசினிமாவில் தன் நிஜப் பெயரிலேயே புகழ் பெற விரும்பும் அனுஷா நாயருக்குத் தன்னைக் கதாநாயகியாக்கிய தமிழ் சினிமாவில் நடித்துப் பிரபலமாக வேண்டும் என்பதே ஆசை. தன்னால் எவ்வளவு சவாலான கதாபாத்திரமானாலும் அதை ஏற்று நடித்து பெயர்ப் வாங்க முடியும் என்ற தன்னம்பிக்கையோடு காத்திருக்கும் அனுஷா நாயர், “நடனமும் நடிப்பும் எனக்கு இரு கண்கள் மட்டுமல்ல – என் உயிரும் கூட!” என்கிறார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.