Shadow

எம்பிரான் – ரொமான்டிக் த்ரில்லர்

Embiran---romantic-thriller

பணம் போட்டவர்களின் நம்பிக்கை பொய்க்கவில்லை. ட்ரெய்லர் மிக நன்றாக வந்துள்ளதாக ‘எம்பிரான்’ தயாரிப்பாளர்கள் பி.பஞ்சவர்ணமும் வி.சுமலதாவும் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் உள்ளனர்.

தயாரிப்பாளர் வி.சுமலதா கூறும்போது, “ஒரு புதிய குழுவுடன் படத்துக்காக இணையும்போது எப்போதும் தயாரிப்பாளர்களுக்கு ஒரு சூழ்நிலை உருவாகும். கதை விவரிப்பு மிகவும் அசாதாரணமானதாக இருந்தாலும், தயாரிப்பாளர்கள் கிட்டத்தட்ட ‘குருட்டுத்தனமான வாய்ப்பு’ முறையில் பட வாய்ப்பை வழங்குவார்கள். ட்ரெய்லரைக் காணும் வரையில் இந்த நிலையில் தான் இருப்பார்கள். ஆனால் எம்பிரானைப் பொறுத்தவரையில், தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ அது நிச்சயம் கிடைக்கும் என்பதில் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் உறுதியாக இருந்தோம். ஆனால் மிகப்பெரிய ஆச்சரியம் ட்ரெய்லர் நாங்கள் எதிர்பார்த்தததை விடச் சிறப்பாக வந்திருக்கிறது. ஒருவேளை, இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடாகத் தெரியலாம். ஆனால் தயாரிப்பாளர்களாக எங்களுக்கு இது மிகவும் திருப்தி அளிக்கிறது” என்றார்.

இயக்குநர் கிருஷ்ணா பாண்டி கூறும்போது, “படம் இந்த அளவுக்கு சிறப்பாக வந்திருக்கிறது என்றால் அதற்கு தயாரிப்பாளர்கள் பஞ்சவர்ணம் சார் மற்றும் சுமலதா மேடம் தான் மிக முக்கிய காரணம். வழக்கமாக, ஒரு புதிய குழுவுடன் இணையும் போது, தயாரிப்பாளருக்குப் பட உருவாக்கத்தின்போது சில சந்தேகங்கள் ஏற்படும். பின்னர் படப்பிடிப்புக்கு வந்து என்ன நடக்கிறது என்று அவ்வப்போது ஆய்வு செய்வார்கள். ஆனால் அவர்கள் எங்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்தது ஆச்சரியமாக இருந்தது. அது தான் பேப்பரில் இருந்த திரைக்கதை அப்படியே திரையில் வர உதவியாக இருந்தது.

“ட்ரைலர் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த படத்தொகுப்பாளர் டி. மனோஜ், இசையமைப்பாளர் பிரசன் பாலா, ஒளிப்பதிவாளர் எம். புகழேந்தி ஆகியோருக்கு நிபந்தனையற்ற நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் இயக்குநர் கிருஷ்ணா.

ரெஜீத் மேனன், ராதிகா பிரீத்தி, பி. சந்திர மெளலி, கல்யாணி நடராஜன், கிஷோர் தேவ், வள்ளியப்பன் மற்றும் இன்னும் சில நடிகர்கள் இந்த ரொமான்டிக் த்ரில்லர் படத்தில் நடித்திருக்கிறார்கள்.