Shadow

Tag: Embiran movie

எம்பிரான் விமர்சனம்

எம்பிரான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எம் + பிரான் என்பதற்கு 'எனது தேவன்' எனப் பொருள்படும். ஜெயாவிற்குப் பிரியன் மீது ஒருதலையாகப் பயங்கரமான காதல். எவ்வளவு முயற்சி செய்தும், தனது காதலை வெளிப்படுத்தும் தைரியம் அவளுக்கு ஏற்படுவதே இல்லை. காதலைச் சொல்லும் முன், அவள் கோமாவிற்குச் சென்று விடுகிறாள். ஜெயாவின் காதல், பிரியனை எப்படிப் போய்ச் சேர்ந்தது என்பதுதான் படத்தின் கதை. படம் லோ-பட்ஜெட் என்றாலும், கதாபாத்திர வடிவமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். உதாரணமாக, கதாநாயகி வீட்டில் அவளும், அவளது தாத்தாவும் என இரண்டு பேர்தான் உள்ளனர். தாத்தாவும் இறந்துவிட, கோமாவிக் ஹாஸ்பிட்டலில் இருக்கும் கதாநாயகியைப் பார்த்துக் கொள்ளக்கூட யாருமில்லை. உறவினர்கள், நண்பர்கள் என ஒரு எக்ஸ்ட்ரா பாத்திரமும் இல்லை. யார் நாயகியின் மருத்துவச் செலவுகளுக்குப் பொறுப்பேற்றது, கவனித்துக் கொண்டது என எந்தத் தர்க்கத்திற்குள்ளும் செல்ல இயக்குநர் விரும்பவில்லை. நா...
எம்பிரான் – ரொமெடிப் படம்

எம்பிரான் – ரொமெடிப் படம்

சினிமா, திரைத் துளி
“முற்றிலும் வேறுபட்ட சூழலில் இருந்து வரும் இருவரின் இடையே வரும் காதலைப் பற்றிய நகைச்சுவைப் படம். ரொமான்ஸும், காமெடி கலந்த படங்களை 'ரொமெடி' எனும் வகையின் கீழ் வரும். திரைக்கதை முற்றிலும் மாறுபட்டவை, வசனங்களைக் காட்டிலும் காட்சிகளின் மூலமே கதையைக் கொண்டு செல்கிறோம். இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி காதலைச் சேர்த்து வைப்பது போல கதை அமைந்துள்ளது. ஜெயா மற்றும் பிரியனின் கதாபாத்திரங்களில் ராதிகா பிரீத்தி மற்றும் ரெஜித் மேனன் நன்றாக நடித்துள்ளனர். கன்னடத்தில் ஓரிரு படங்களில் நடித்துள்ள ராதிகா ப்ரீத்தி, இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். விக்ரமின் ‘நினைத்தது யாரோ' படத்தின் மூலம் அறிமுகமான ரெஜித் மேனன் இந்தப் படத்தில் முன்னனி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இந்தப் படத்தில் சந்திர மௌலி, கல்யாணி நடராஜன், கிஷோர் தேவ் மற்றும் வள்ளியப்பா நடித்துள்ளனர்” என்றார் இயக்குநர் கிருஷ்ண பாண்டி. இந்தத் தி...
எம்பிரான் – ரொமான்டிக் த்ரில்லர்

எம்பிரான் – ரொமான்டிக் த்ரில்லர்

சினிமா, திரைத் துளி
பணம் போட்டவர்களின் நம்பிக்கை பொய்க்கவில்லை. ட்ரெய்லர் மிக நன்றாக வந்துள்ளதாக 'எம்பிரான்' தயாரிப்பாளர்கள் பி.பஞ்சவர்ணமும் வி.சுமலதாவும் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் உள்ளனர். தயாரிப்பாளர் வி.சுமலதா கூறும்போது, "ஒரு புதிய குழுவுடன் படத்துக்காக இணையும்போது எப்போதும் தயாரிப்பாளர்களுக்கு ஒரு சூழ்நிலை உருவாகும். கதை விவரிப்பு மிகவும் அசாதாரணமானதாக இருந்தாலும், தயாரிப்பாளர்கள் கிட்டத்தட்ட 'குருட்டுத்தனமான வாய்ப்பு' முறையில் பட வாய்ப்பை வழங்குவார்கள். ட்ரெய்லரைக் காணும் வரையில் இந்த நிலையில் தான் இருப்பார்கள். ஆனால் எம்பிரானைப் பொறுத்தவரையில், தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ அது நிச்சயம் கிடைக்கும் என்பதில் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் உறுதியாக இருந்தோம். ஆனால் மிகப்பெரிய ஆச்சரியம் ட்ரெய்லர் நாங்கள் எதிர்பார்த்தததை விடச் சிறப்பாக வந்திருக்கிறது. ஒருவேளை, இது ஒரு மி...