32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

Fourth Floor – ஆரி அர்ஜுனன் நடிக்கும் த்ரில்லர்

Dinesh R சேலம் Published: 25/01/2026 2 நிமிட வாசிப்பு Updated: 28/01/2026 சினிமா
எழுத்து அளவு:

மனோ க்ரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா தயாரிப்பில், இயக்குநர் LR சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் பரபரப்பான த்ரில்லராக உருவாகியுள்ள “ஃபோர்த் ஃப்ளோர்” எனும் திரைப்படம், வரும் பிப்ரவரி மாதம் இறுதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சென்னையின் மையப்பகுதி ஒன்றில், ஒரு குடியிருப்பில் நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத த்ரில்லர் அனுபவத்தைத் தரும் வகையில், இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் LR சுந்தரபாண்டி. சைக்காலஜிகல் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், கனவுகளுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பினை எதார்த்தமாக சொல்லுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தீப்ஷிகா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

‘போடா போடி’ படப்புகழ் இசையமைப்பாளர் தரண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘போடா போடி’, ‘வெண்ணிலா கபடி குழு’ படங்களின் ஒளிப்பதிவாளர் J லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அநீதி, ஜெயில் மற்றும் மத்தகம் வெப் சீரிஸிற்கு கலை இயக்கம் செய்த சுரேஷ் கல்லேரி கலை இயக்கம் செய்கிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து, விரைவில் இசை மற்றும் ட்ரெய்லரை வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருகிறன்றனர். செவன்த் ஸ்டுடியோ சார்பாக K.கண்ணன், இப்படத்தைத் தமிழ்நாடு தியேட்டர் வெளியீடு செய்கிறார். இப்படம் வரும் பிப்ரவரி மாத இறுதியில் திரைக்கு வருகிறது.

தொழில்நுட்பக் குழு:-

இயக்கம் – L R சுந்தரபாண்டி
தயாரிப்பாளர் – A.ராஜா
நிர்வாக தயாரிப்பாளர் – சூரிய பிரகாஷ் P
ஒளிப்பதிவு – J லக்ஷ்மன்
இசை – தரண் குமார்
பாடலாசிரியர் – கு கார்த்திக்
படத்தொகுப்பு – ராம் சுதர்ஷன்
கலை – சுரேஷ் கல்லேரி
நடனம் – அபு சால்ஸ்
சண்டை – டேஞ்சர் மணி
மக்கள் தொடர்பு – A ராஜா

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.