32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

இன் கார் – காருக்குள் நிகழும் பெண்ணின் மனவேதனை

Dinesh R சேலம் Published: 02/02/2023 3 நிமிட வாசிப்பு Updated: 02/03/2023 அயல் சினிமா
எழுத்து அளவு:

இன்பாக்ஸ் பிக்சர்ஸ் சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் “இன் கார்”. கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அவளது பார்வையில் அந்தக் கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது. தமிழில் ஸ்டுடியோ க்ரீன் சார்பில் K.E. ஞானவேல் ராஜா இப்படத்தை வழங்குகிறார். மார்ச் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ந்தது.

அச்சந்திப்பில் பேசிய இயக்குநர் ஹர்ஷ் வர்தன், ” ‘இன் கார்’ படம் என் வாழ்வில், என் உறவினர் ஒருவருக்கு நடந்த சம்பவத்தின் பாதிப்பால் உருவாக்கப்பட்டது. பெண்கள் மீதான வன்முறை ஒவ்வொரு நாளும், இந்தியா முழுக்க நடந்து கொண்டே இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகள் பலர், பல துன்பமான நிகழ்வுகளைச் சந்திக்கின்றனர். என்னுடைய வெளிநாட்டு நண்பர்கள் பலரும் இது பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். நாமே செய்திகளில் தினமும் இது போன்ற விஷயங்களைக் கடந்து போகிறோம். இது ஏன் நடக்கிறது? இதை செய்பவர்கள் மிக இயல்பான வாழ்க்கை வாழும் மனிதர்கள், அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது, நம்மைப்போல் தான் அவர்களும். எது அவர்களை இது போன்ற குற்றங்களைச் செய்ய வைக்கிறது. கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்படும் பெண் என்னென்ன சித்ரவதைக்கு ஆளாகிறாள், அந்த நொடி எத்தனை மன ரீதியான பிரச்சனைகளைத் தரும், இதையெல்லாம் சொல்ல நினைத்து உருவானதே “இன் கார்”. இது அனைவருக்கும் செல்ல வேண்டும் என்ற நோக்கில் தான் அனைத்து மொழிகளிலும் வெளியிடுகிறோம்” என்றார்.

நடிகை ரித்திகா சிங், ” ‘இன் கார்’ படம் எனக்கு மிகப் பெரும் சவாலானதாக இருந்தது. ஒரு கடத்தலுக்கு உள்ளாகும் பெண் எத்தனை மனச்சிதைவுக்கு உள்ளாகிறாள், அவள் துன்பத்தின் எந்த எல்லை வரை செல்லுகிறாள் என்பதை நுணுக்கமாக இந்தப் படம் சொல்லும். இந்தப் படத்தில் நடித்த பிறகும் என்னால் அந்தக் கதாபாத்திரத்தில் இருந்து வர முடியவில்லை. எனக்குள் பெரும் பாதிப்பை “இன் கார்” படம் ஏற்படுத்தியது. நடிப்புத்தான் என்று தெரிந்தாலும், பாதிக்கப்படும் பெண்ணின் வலியை இன்று வரையிலுமே நான் சுமக்கிறேன். இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் ஹர்ஷ் வர்தனுக்க்கு நன்றி” என்றார்.

பெண்களை வன்புணர்வு செய்பவர்களுக்கு என்ன தண்டனை அளிக்கலாம் என்ற கேள்விக்கு, “இருக்கிற எல்லா உச்சபட்ச தண்டனையையும் அந்தக் குற்றவாளிக்கு வழங்கவேண்டும். எனக்குத் தெரியவில்லை, இரக்கமில்லாமல் நடந்து கொள்பவர்களை நினைத்தாலே கோபம் வருகிறது” என்று உணர்ச்சிவசப்பட்டு பதில் கூறினார்.

அதே கேள்விக்கு விடையளித்த இயக்குநரோ, “நான் அத்தகைய கேள்விக்குள் செல்லவே இல்லை. ஆண்கள் அனைவரும் கொடூரமானவர்கள், இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று எந்தக் கொணத்திலும் படத்தை அணுகவில்லை. பல உண்மைச் சம்பவங்கள் அடிப்படையில் இப்படத்தை உள்ளது உள்ளபடி எடுத்துள்ளோம். அது போன்ற கொடூரமான குற்றம் நிகழும்போது, பெண்கள் எத்தகைய துன்பத்திற்கு உள்ளாவர்கள் என்பதே படத்தின் கரு” என்றார்.

முதலில், ‘மீ டூ’ எனத் தலைப்பிடப்பட்ட இப்படம், அத்தலைப்பு கிடைக்காததால் ‘இன் கார்’ என மாற்றியுள்ளனர்.

நடிகர்கள்:

ரித்திகா சிங்
சந்தீப் கோயத்
மனிஷ் ஜான்ஜோலியா
ஞான பிரகாஷ்

தொழில்நுட்பக் குழு:

தயாரிப்பு நிறுவனம் – இன்பாக்ஸ் பிக்சர்ஸ்
தயாரிப்பு – அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி
எழுத்து இயக்கம் – ஹர்ஷ் வர்தன்
ஒளிப்பதிவு – மிதுன் கங்கோபாத்யாய்
படத்தொகுப்பு – மாணிக் திவார்
சண்டை – சுனில் ரோட்ரிக்ஸ்
மக்கள் தொடர்பு – சதீஷ்குமார் (AIM )

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.