Shadow

காளிதாஸ் விமர்சனம்

 kalidas-movie-review

காளிதாஸ் நல்ல சைக்காலஜிகல் த்ரில்லர் படம். பரத்துக்கு இந்த படம் நல்லதொரு கம்பேக்காக அமையும்.

அடிக்கடி மர்மமான முறையில் பெண்கள் இறந்து போகிறார்கள். அவை தற்கொலைகள் என்றும், அதற்குக் காரணம் ப்ளூவேல் கேம்தான் என பரத் நினைக்கிறார். பரத்தால் இந்த வழக்கை முடிக்க முடியாததால் சுரேஷ் மேனன் அவ்வழக்கைத் துப்பு துலக்க வருகிறார். இருவரும் சேர்ந்து அது கொலையா தற்கொலையா எனக் கண்டுபிடிப்பதுதான் கதை.

இது போக, பரத் வீட்டுக்கே வராமல் போலீஸ் வேலையிலையே பிசியாக இருப்பதால் அவரது மனைவி, வீட்டு மாடியில் வாடைகைக்குக் குடியிருக்கும் ஆதவ் கண்ணதாசன் மீது காதல் கொள்கிறார். அதனால் அவருக்கு என்ன ஆச்சு என்பதுதான் செம க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்.

இதில் மிகுந்த சுவாரசியமான விஷயம், சுரேஷ் மேனனுக்கும் பரத்துக்கும் உள்ள உறவு. இப்படி ஒரு மேலதிகாரியும் இருப்பாரா என்று பார்வையாளர்களுக்குத் தோன்றும். பரத்துக்கு ஆலோசனை செய்வதாகட்டும், பரத்தைக் கேள்வி கேட்பதாகட்டும் நன்றாக நடித்துள்ளார் சுரேஷ் மேனன். இருவருக்கும் உள்ள கெமிஸ்ட்ரி ரசிக்க வைக்கிறது. பரத்தை விடவுமே சுரேஷ் மேனனுக்குத்தான் முக்கிய கேரக்ட்டர் இப்படத்தில். பரத்தைப் போலவே சுரேஷ் மேனனுக்கும் இந்த படம் ஒரு நல்ல ரீ-என்ட்ரியா இருக்கும். ஆதவ் கண்ணதாசனின் பாத்திரமும் நன்றாக வந்துள்ளது.

போலீஸ் ஸ்டேஷனில் பழைய ஜோக் தங்கதுரை வருகின்ற காட்சிகளில் கொஞ்சம் நகைச்சுவை எட்டிப் பார்க்கிறது. படத்தின் கிளைமேக்ஸ், துருவங்கள் 16 போல இருக்கும் என நினைத்தால் அதிலும் ஒரு ட்விஸ்ட் வைத்து எதிர்பாராத முடிவைத் தந்துள்ளனர். கிளைமேக்ஸ்.

விஷால் சந்திரசேகர் இசை சில இடங்களில் மட்டும் மிரட்டுகிறது. படத்தின் முதல் ஷாட்டிலியே கலக்கத் தொடங்கிவிடுகிறார்ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா.

சில இடங்களில் லாஜிக் மிஸ்டேக்கும், முதல் பாதி கொஞ்சம் ஸ்லோவாகச் சென்றாலும்,படம் போர் அடிக்காமல் போகிறது. அறிமுக இயக்குநர் ஸ்ரீசெந்தில் மேக்கிங்கில் மிரட்டி இருக்கிறார்.

ரமேஷ் சுப்புராஜ்