‘செக்ஸி துர்கா’ எனும் படத்தை இயக்கிய சனல் குமார் சசிதரனின் ‘சோலா’ எனும் மலையாளப் படத்தை, “அல்லி” என்ற பெயரில் தனது ஸ்டோன் பென்ச் நிறுவனத்தின் சார்பாக வெளியிடுகிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
நகர வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாத கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியும், அவரது காதலனும் யாருக்கும் தெரியாமல், ஒரு நாள் நகரத்திற்குச் சென்று வர விரும்புகிறார்கள். அவர்களின் பயணத்தில், மூன்றாவதாய் ஒரு நபர் இணைந்து கொள்கிறார். இந்தப் பயணத்தால், பள்ளி மாணவியின் வாழ்க்கை என்னானது என்பது தான் இப்படத்தின் கதை.
“இதுபோன்ற படங்கள் திரையரங்குகளில் வெளியாகாது. ஆனால் படவிழாக்கள் மற்றும் விருது நிகழ்ச்சிகளில் மட்டுமே வெளியாகும். இப்படத்தில் பாடல்கள், நகைச்சுவைகள், சண்டைக்காட்சிகள் என்று எந்த ஒரு விசயமும் இருக்காது. படம் முழுவதும் மிக எதார்த்தமாக தான் இருக்கும். இந்த படம் எடுக்க எந்த ஒரு வியாபார நோக்கமும் இல்லை” என்று கூறினார் கார்த்திக் சுப்புராஜ்.
இப்படத்தின் ட்ரெய்லர் மிகவும் கவனித்தகாக உள்ளது. டிசம்பர் மாதம் வெளியாக உள்ள இப்படத்தைத் தொடர்ந்து மேலும் பல டிஜிட்டல் படங்களைத் தயாரித்து திரையரங்குகளில் வெளியிடவுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
நடிகர்கள்:
>> நிமிஷா சஜயன்
>> அகில் விஸ்வனாத்
>> ஜோஜு ஜார்ஜ்
தொழில்நுட்பக் கலைஞர்கள்:
>> தயாரிப்பு – கார்த்திகேயன் சந்தானம், ஜோஜு ஜார்ஜ்
>> இயக்கம் – சனல் குமார் சசிதரன்
>> திரைக்கதை – K.V.மணிகண்டன், சனல் குமார் சசிதரன்
>> ஒளிப்பதிவு – அஜித் ஆச்சார்யா
>> இசை – C.J.பசில்
>> படத்தொகுப்பு – சனல் குமார் சசிதரன்
>> ஒலி கலவை – சனல் குமார் சசிதரன்
>> ஒலி சேர்ப்பு – தபஸ் நாயக்
>> DI – Rangrays Media Works
>> வெளியீடு – ஸ்டோன் பென்ச்
>> மக்கள் தொடர்பு – நிகில்