32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

கற்பு பூமியில் சில கருப்பு ஆடுகள் விமர்சனம்

Dinesh R சேலம் Published: 05/04/2024 1 நிமிட வாசிப்பு Updated: 16/06/2025 இது புதிது
எழுத்து அளவு:

பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் நேசம் முரளி.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அரசியல்வாதியின் மகன் ஒருவன் பெண்களிய எல்லாம் கடத்தி மானபங்கப்படுத்தி, தொடர் சித்திரவதை செய்து வருகிறான். IAS பயிற்சி வகுப்பிலுள்ள மாணவனை, ஒரு பெண் காவல்துறை அதிகாரி கைது செய்கிறார். ப்ளேடு பக்கிரி எனும் ரெளடியின் பெயரில் அவனைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார். அந்த மாணவனை அவ்வதிகாரி ஏன் கைது செய்கிறார், அந்த மாணவன் எப்படித் தப்பிக்கிறான் என்பதும்; படுபாதக செயல்களில் ஈடுபட்டு வரும் அரசியல்வாதி மகனுக்கும், அப்பெண் காவலதிகாரிக்கும், மாணவனுக்கும் என்ன சம்பந்தம் என்பதுமே படத்தின் கதை.

தன் மேலதிகாரியை ஒருதலையாகக் காதலிக்கும் பாத்திரத்தில் கஞ்சா கருப்பு நடித்துள்ளார். அவர் நகைச்சுவை என்ற பெயரில் செய்யும் சேட்டையைப் பொறுத்துக் கொள்ள பிரம்ம பிரயத்தனம் செய்யவேண்டியுள்ளது. வையாபுரியும் அவர் பங்குக்கு நையப்புடைக்கிறார். மாணவனின் ஹால் டிக்கெட்டைப் பெண் காவலதிகாரி கிழித்துவிட, மாணவன் உணர்ச்சி வசப்பட்டுக் காவல்துறையினரை அடித்து நொறுக்குகிறான். ஆந்திரப் படத்து உச்ச நாயகர்கள் போல், ஹைப்பராகவே இருக்கிறார் அந்த தம்பி. மேலதிக புரிதல்களுக்கு ட்ரெய்லரை நோக்கவும்.

மிகவும் கறாரான எச்சரிக்கையோடு படத்தை முடித்துள்ளார் நேசம் முரளி. குற்றங்கள் தொடர்ந்தால், இரண்டாம் பாகம் எடுக்கப்படுமாம்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.