Shadow

Tag: நிகில்

ONE MAN விமர்சனம்

ONE MAN விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சினிமா மீது ஒப்பற்ற காதலும், தன் மீது அசாத்திய நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகக் கூடிய மகத்தானதொரு முயற்சியை மேற்கொண்டு சாதித்துள்ளார் இயக்குநர் ராச்குமார். சினிமா என்பது பலரின் கூட்டு முயற்சியைக் கோரும் தொழிலாகும். ஆனால், சங்ககிரி ராச்குமார் தனி ஒருவராக, ஒப்பனை, VFX, ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்பு என சுமார் 78 துறை சார்ந்த வேலையைக் கையாண்டுள்ளார். கற்பனைக்கு மிஞ்சியதொரு அசுரத்தனமான உழைப்பைச் செலுத்தியுள்ளார். அவரே ஒப்பனை போட்டுக் கொண்டு, கேமராவை இயக்கி, நான்கு வேடங்களில் தோன்றி, நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. மனிதர்கள் அனைவரும் பூமியில் இருந்து மறைந்து விட, ராஜா, ஜாக், பூமா, ரூபி ஆகிய நான்கு நண்பர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். யாருமில்லா உலகில், பத்து நாட்கள் மகிழ்ச்சியாக வலம் வரத் திட்டமிடுகின்றனர். அதன் படி நாடு நாடாகச் சுற்றி அமெரிக்காவை அடைகின்றனர். பத்து நாட்கள் முடி...
ONE MAN – ஒருநாள் உலகம் கொண்டாடும் | சேரன்

ONE MAN – ஒருநாள் உலகம் கொண்டாடும் | சேரன்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் சங்ககிரி ராச்குமார் கதையின் நாயகனாக மட்டுமல்லாமல், ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்திற்குத் தேவையான பல்வேறு பணிகளைத் தனி ஒருவராக மேற்கொண்டு, உலக சினிமாவில் இதுவரை யாரும் மேற்கொள்ளாத வகையிலான ஒரு முயற்சியாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் தனித்துவமான சாதனையை நிகழ்த்திய தமிழர் என்ற அடையாளத்தையும் அவர் பெற்றுள்ளார். எதிர்வரும் 21-ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ONE MAN’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ் மற்றும் இயக்குநர்கள் சேரன், லெனின் பாரதி, ஏ.ஆர்.கே. ராஜராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய இயக்குநரும் நடிகருமான சேரன், “ஒரு நாள் ரோகிணி மேடம் ஃபோன் செய்து, ‘வெங்காயம்’ என்றொரு படத்தைப் பார்த்தேன். நன்றாக இருக்கிறது. நீங்களும் பாருங்கள் என்றார். அவருடைய பரிந்த...
ONE MAN – ஒரு வரலாற்றுப் பதிவு | ARK ராஜராஜா

ONE MAN – ஒரு வரலாற்றுப் பதிவு | ARK ராஜராஜா

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் சங்ககிரி ராச்குமார் கதையின் நாயகனாக மட்டுமல்லாமல், ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்திற்குத் தேவையான பல்வேறு பணிகளைத் தனி ஒருவராக மேற்கொண்டு, உலக சினிமாவில் இதுவரை யாரும் மேற்கொள்ளாத வகையிலான ஒரு முயற்சியாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் தனித்துவமான சாதனையை நிகழ்த்திய தமிழர் என்ற அடையாளத்தையும் அவர் பெற்றுள்ளார். எதிர்வரும் 21-ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ONE MAN’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ் மற்றும் இயக்குநர்கள் சேரன், லெனின் பாரதி, ஏ.ஆர்.கே. ராஜராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் சங்ககிரி ராச்குமார், “இந்தப் படத்தின் அனைத்து பணிகளையும் நிறைவு செய்த பிறகு, திரையரங்குகளில் படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். த...
ONE MAN – ஒரே ஒருவர் மட்டுமே உருவாக்கிய முழு நீள ஆக்‌ஷன் படம்

ONE MAN – ஒரே ஒருவர் மட்டுமே உருவாக்கிய முழு நீள ஆக்‌ஷன் படம்

சினிமா, திரைத் துளி
உலகில் யாரும் செய்திடாத முயற்சியாக, சங்ககிரி ராஜ்குமாரின் பெரும் முயற்சியில் ONE MAN திரைப்படம் உருவாகியுள்ளது. ஒரு திரைப்படத்திற்குத் தேவையான 70-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த பணிகளை எந்தவித உதவியாளர்களும் இல்லாமல், தொடக்கம் முதல் இறுதிவரை ஒற்றை மனிதனாகச் செய்து முடித்திருக்கிறார். ஒவ்வொரு துறையிலும் பத்துக்கும் மேற்பட்ட உதவியாளர்கள் இணைந்து பணியாற்றும் நிலையில், இத்தனை பணிகளையும் தனி ஒருவராகச் செய்து முடித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தனி ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட படம் என்பதால், இது திரைப்பட விழாக்களுக்கான படமாக இருக்கும் என்று சிலர் நினைத்திருக்கக்கூடும். ஆனால், இதில் பரபரப்பான ஹெலிகாப்டர் சேசிங் காட்சி, ஒரு ரயில் இன்னொரு ரயிலில் மோதும் விபத்துக் காட்சி, அமெரிக்காவில் படமாக்கப்பட்ட கார் சேசிங் காட்சி, பெரிய அருவியில் குதித்து ஐந்து பேர் தப்பிப் பிழைக்கும் காட்சி போ...
அருள்வான் விமர்சனம் | Arulvaan review

அருள்வான் விமர்சனம் | Arulvaan review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
அருள் என்பது இறைவனின் எல்லையற்ற கருணை, இரக்கம் மற்றும் ஆசீர்வாதத்தைக் குறிக்கும் ஆன்மிகச் சொல்லாகும். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் கடவுளின் ஐந்தொழில்களில் மிக மேன்மைமிக்க ஒன்றாகும். அத்தகைய தெய்வத்தின் தொழிலை, ஒரு மனிதனால் செய்ய முடியுமா? 'புண்ணியம் கோடிஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' எனும் பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டி, 'முடியும்' என்கிறார் இயக்குநர். பூங்கொடி எனும் மலைக்கிராமத்தில் வாழும் குறிஞ்சி எனும் சிறுமி, கல்வியே தங்களுக்கான விடியலைத் தரும் எங்கின்ற முயற்சியில் மேற்கொள்ளும் நம்பிக்கைப் பயணமே இப்படத்தின் கதையாகும். காளி வெங்கட்டைக் கதையின் நாயகனாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படமிது. ஆரவும் அருள்நிதியும் படத்திற்குள் வர, காளி வெங்கட்டிற்குப் பத்திரிகையாளர் தன்ராஜ் எனும் சிறு வேடமே வாய்த்துள்ளது. மருத்துவமனைக் காட்சியில், குறிஞ்சியின் நிலைமையைக் குறித்து உருக்...
அந்தரன் விமர்சனம் | Andharan review

அந்தரன் விமர்சனம் | Andharan review

சினிமா, திரை விமர்சனம்
அந்தரன் என்றால் மறைந்திருந்து தாக்கும் வேட்டைக்காரன் என்று பொருள். கார்த்திகா எனும் இளம்பெண்ணிற்குத் திருமணம் நிச்சயமாகும் பொழுதெல்லாம், கல்யாணத்திற்கு முன் அந்த மாப்பிள்ளை கொலை செய்யப்பட்டோ, தற்கொலை செய்தோ, தற்செயலாகவோ இறந்து விடுகின்றனர். இந்த மரணங்களின் பின்னணியைத் துப்புத் துலக்கக் காவல்துறை அதிகாரி செழியன் நியமிக்கப்படுகிறார். மறைந்திருந்து வேட்டையாடுபவரை எப்படி உடனின்று கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. அந்தரனிற்கு முன், அந்தரனிற்குப் பின் என தன் வாழ்க்கை மாறுமென செழியனாக நடித்துள்ள பிரஜின் தீர்க்கமாக நம்புகிறார். அவரது நம்பிக்கை மிகையில்லை எனச் சொல்லுமளவிற்குப் படத்தின் கதை சுவாரசியமாகவும், நடிகர்களின் பங்களிப்பு சிறப்பாகவும் அமைந்துள்ளது. பிரதான போலீஸ் கதாபாத்திர வேடத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார் பிரஜின். ஒரு போலீஸ்காரராகவும், காதலைப் பல வருடம் மனதில் சுமந்து திரிப...
நூறு சாமி விமர்சனம் | Nooru Saami review

நூறு சாமி விமர்சனம் | Nooru Saami review

சினிமா, திரை விமர்சனம்
'நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா?' எனப் பத்தாண்டுகளுக்கு முன் 'பிச்சைக்காரன் (2016)' படத்தில் ஏகாந்த்ராஜ் எழுதிய பாடல் வரிகளில் இருந்து தலைப்பு எடுத்தாளப்பட்டுள்ளது. அம்மாவைத் தெய்வமாகப் பார்த்தால் பிச்சைக்காரன், அம்மாவை மனுஷியாகப் பார்த்தால் நூறு சாமி என்று சசியே விளம்பரப்படுத்தியுள்ளார்.இரண்டு படங்களுமே உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. தனது தாய் செல்விக்கும் ஒரு வாழ்க்கை உண்டென உணர்ந்து, அவரை மறுமணம் செய்யக் கட்டாயப்படுத்துகிறான் மூத்த மகன் பாஸ்கர். முதலில் தயங்கும் செல்வி, பின் அதற்கு மெல்ல செவி சாய்க்கிறார். ஊரும் உறவினர்களும் அதற்கு எப்படி எதிர்வினையாற்றுகின்றனர் என்றும், செல்விக்கு மறுமணம் ஆனதா இல்லையா என்பதே படத்தின் கதை. நூறு சாமியின் அச்சாணியாக விளங்குகிறார் செல்வியாக நடித்துள்ள லப்பர் பந்து சுவாசிகா. படத்தின் குறைகளை எல்லாம் மறக்கச் செய்து,...
ஹார்ட்டின் – காதலைப் பேசும் ஆத்மார்த்தமான திரைப்படம்

ஹார்ட்டின் – காதலைப் பேசும் ஆத்மார்த்தமான திரைப்படம்

சினிமா, திரைச் செய்தி
ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் R. ரவீந்திரன் மற்றும் ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் நடிகர் சனந்த் கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'ஹார்ட்டின்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. ரொமான்டிக் என்டர்டெய்னராக உருவாகியுள்ள 'ஹார்ட்டின்' திரைப்படத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா T, வாட்ஸப் மணி, டெப்னிதா கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முகேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளைப் பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை துரைராஜ் கவனித்திருக்கிறார். ஜூன் 26ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. டத்தொகுப்பாளர் பரத் விக்ரமன், ''இயக்குநர் எழுதி இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அழுத்தமும்.. தனித்துவமும் இருக்கிறது. அதி...
டார்க் – தனுஷுக்காக எழுதப்பட்ட சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம்

டார்க் – தனுஷுக்காக எழுதப்பட்ட சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம்

சினிமா, திரைச் செய்தி
எம்.ஜி. ஸ்டூடியோஸ் ஏ.பி.வி. மாறன், கணேஷ் கே. பாபு மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கே. செந்தில் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி நடித்திருக்கும் 'டார்க்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் மணிமாறன், ''டார்க் ஒரு சைக்காலஜிக்கல் ஹாரர் த்ரில்லர் திரைப்படம். மலையாளம் மற்றும் வெளிநாட்டு மொழிகளில் வெளியாகும் திரில்லர் திரைப்படங்களைப் பார்த்துவிட்டு, இதுபோன்ற படங்கள் தமிழில் வெளியாக வேண்டும் என நினைப்போம். அப்படி ஒரு திரைப்படமாகத்தான் இந்த 'டார்க்' திரைப்படம் இருக்கும். இந்தப் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் ஒரு பாடலை பாடியுள்ளனர் அந்த பாடலுக்கு எஸ். தமன் இசை அமைத்திருக்கிறார் இந்தப் பாடலை நாங்கள் படத்தின் ப்ரோமோவிற்காக உருவாக்கியுள்ளோம். 'டாடா' படத்தின் வெற்...
டார்க் – ட்ரெய்லர் | DARK Tamil movie trailer

டார்க் – ட்ரெய்லர் | DARK Tamil movie trailer

Trailer, காணொளிகள், சினிமா
நடிகர்கள்:-அஜய் கார்த்தி அஞ்சனா நேத்ரன் நட்டி நட்ராஜ் கே. பாக்யராஜ் சிபி சக்கரவர்த்தி விடிவி கணேஷ் அரவிந்த் சாகுல் நரேன்தொழில்நுட்பக் குழு:-இசை - மனு ரமேசன் ஒளிப்பதிவு - ரவி சக்தி படத்தொகுப்பு - கதிரேஷ் அழகேசன் கலை - சண்முகராஜா சண்டை - நைஃப் நரேன் நடனம் - சதீஷ் பாடல் - யுகபாரதி, விவேக், கணேஷ் கே. பாபு ஒலி வடிவமைப்பு - அருணாச்சலம் சிவலிங்கம் ஒப்பனை - முகம்மது உடை - காயத்ரி பாலசுப்பிரமணியன் நிர்வாக தயாரிப்பு - மீனா அருணேஷ் சவுண்ட் மிக்சிங் - B. முத்துக்கிருஷ்ணன் டி ஐ - லிக்சோ பிக்சல்ஸ் கலரிஸ்ட் - ஜி. எஸ். முத்து ஸ்டில்ஸ் - குமரேசன் தயாரிப்பு மேலாளர் - பாலாஜி பாபு எஸ் கோ டைரக்டர் - சதீஷ் சுகுமார் இணை ஒளிப்பதிவு - கண்ணதாசன் செழியன் இணை படத்தொகுப்பு - தீபன் சந்திரசேகரன் இசை லேபிள் - திங்க் மியூசிக்...
“நூறு சாமியில் ஒரு சாமி இயக்குநர் சசி” – மிஷ்கின்

“நூறு சாமியில் ஒரு சாமி இயக்குநர் சசி” – மிஷ்கின்

சினிமா, திரைச் செய்தி
'பிச்சைக்காரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான கவனத்தை ஈர்த்த இயக்குநர் சசி-விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் 'நூறு சாமி' படத்தின் முன் வெளியீட்டுக்கு நிகழ்வு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. ஃபீல் குட் வித் கமர்சியல் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க, மீரா விஜய் ஆண்டனி வழங்குகிறார். வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராம், "ஒரு நாள் இயக்குநர் சசி ஃபோன் செய்து, ஒரு சூழலை விவரித்துப் பாடலுக்கான மெட்டு வேண்டும் எனக் கேட்டார். அதுதான் 'அம்மா அம்மா.. 'எனும் பாடல். அந்தப் பாடலின் மெட்டைக் கேட்டதும் சசி சாருக்குப் பிடித்துப் போனது. உடனடியாக இந்தப் படத்திற்கு நீங்கள் தான் இசையமைப்பாளர் என...
அந்தரன் – மறைந்திருந்து தாக்கும் வேட்டைக்காரன் | த்ரில்லர் திரைப்படம்

அந்தரன் – மறைந்திருந்து தாக்கும் வேட்டைக்காரன் | த்ரில்லர் திரைப்படம்

சினிமா, திரைச் செய்தி
ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் மு.கி.சாம்பசிவம் தயாரிப்பில், சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் நடிகர் பிரஜின் கதையின் நாயகனாக நடிக்கும் 'அந்தரன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. வரும் 25 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இயக்குநர் சந்தோஷ் ராவணன், ''இந்தத் திரைப்படத்தின் கதையைத் தயாரிப்பாளர் சாம்பசிவத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினேன். அதனைப் படித்து, இரண்டு நாட்களில், 'கதை நன்றாக இருக்கிறது. ஆனால் இப்போது என்னால் தயாரிக்க இயலாது' என்றார். அதன் பிறகு ஆறு மாதம் கழித்து மீண்டும் என்னை அழைத்து, 'என்னுடைய நண்பர் ராஜேந்திர பிரசாத் வருகை தந்துள்ளார். அவருக்குக் கதையைச் சொல்ல முடியுமா?' எனக் கேட்டார். கதையைச் சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்தது. அவர் கொடுத்த பேராதரவின் காரணமாகத்தான் தயாரிப்பாளர் சாம்பசிவம் இப்படத்தின் பணிகளைத் தொடங்கினார். அதன் ...
காட்டாளன் விமர்சனம் | Kaattalan review

காட்டாளன் விமர்சனம் | Kaattalan review

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தமிழில், காட்டை ஆள்பவன் என்பது போல் பொருளைத் தந்தாலும், மலையாளத்தில் காட்டாளன் எனும் சொல்லுக்கு மூன்று அர்த்தங்கள் உள்ளன. ஒன்று, வேட்டைக்காரன்; இன்னொன்று, காட்டின மக்கள்; மற்றது, காட்டான் ஆகும். காட்டாளனுக்குக் கீழ், 'தி ஹன்டர்' என ஆங்கிலத்தில் வந்தாலும், மூன்று அர்த்தங்களிலும் படத்தைக் கொள்ளலாம். அதில் நாகரிகமற்றவன் என்று பொருளில் வரும் காட்டான் என்ற அர்த்தமே படத்தின் கதைக்கருவிற்குச் சால பொருந்துகிறது. ஆனக்கொல்லி காட்டில், தந்தங்களுக்காக யானைகளை வேட்டையாடுகின்றான் மாரி. யானைத்தந்தங்களைக் கடத்தும் கடத்தல் குழுமத்தின் (Cartel) தலைவனாகவும் வளர்கிறான். மாரியின் தொழிலைக் கெடுத்துக் கடத்தல் குழுமத்தின் தலைவனாகப் பார்க்கிறான் எடி. எடியின் முயற்சிகள் வெற்றி பெற்று, மாரியின் தந்தங்களை ராமேஸ்வரத்திற்குக் கொண்டு செல்ல விடாமல் செய்துவிடுகிறான். எடியை எதிர்க்க, ஆண்டனி என்பவனை அழைத்து வருகிறான் மாரி....
Blast விமர்சனம் | பிளாஸ்ட் review

Blast விமர்சனம் | பிளாஸ்ட் review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
143.50 UA தனது மகள் நிலாவைத் தைரியம் மிக்கவராகவும், பிறருக்கு உதவி செய்பவராகவும் வளர்க்கிறார் கராத்தே மாஸ்டரான ராஜாராமன். தனது நகையை அபகரிக்க நினைக்கும் டோபியிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறார் இளைஞியான நிலா. அந்தத் தற்காப்பு நடவடிக்கை, அவர்கள் வீட்டுக்கு ஆறு கொலையாளிகள் வரக் காரணமாகி விடுகிறது. கொலை செய்ய வந்தவர்கள் யார், அந்தப் பெரிய கொலைகாரக் கும்பலிடம் ராஜாராமனது குடும்பம் எப்படித் தப்புகிறது என்பதுதான் படத்தின் கதை. படத்தின் முதற்பாதி உண்மையிலேயே ஒரு பிளாஸ்ட் போல் வெடிப்புற வேகமாகப் பயணிக்கிறது. படத்தின் தொடக்கத்தில் வரும் ராஜாராமனுக்கும், அவரது மகள் சிறுமியான நிலாவிற்குமான அத்தியாயம் பார்வையாளர்களை வசீகரித்துத் தனக்குள் இழுத்துக் கொள்கிறது. சிறுமி ஆக்ரோஷமாகவும் அட்டகாசமாகவும் அசத்தலாகவும் நடித்துள்ளார். ப்ரீத்தி முகந்தனிடம் கூட அந்த ஆட்டிட்யூட் மிஸ்ஸிங். அறிமுக இயக்குநர் சுப...
BLAST: பெண்களை எப்படி வளர்க்க வேண்டும் | ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்

BLAST: பெண்களை எப்படி வளர்க்க வேண்டும் | ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், 'ஆக்‌ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி, வரும் 28 ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது 'பிளாஸ்ட்' திரைப்படம். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் சுபாஷ் கே. ராஜ், ''இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தான் என்னுடைய திரையுலக குரு. அவருடைய 'லவ் டுடே' படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு கதை எழுதி அவரிடம் சொன்ன போது, அவர்தான் ஏஜிஎஸ் நிறுவனத்தில் கதை சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இந்தப் படத்தை எந்த இடத்திலும் சமரசம் எல்லாம் முழுச் சுதந்திரத்துடன் உருவாக்கியிருக்கிறேன். என்னுடைய முதல் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.'பிளாஸ்ட்' ஆக்ஷன் படம் தான். ஆனால...