32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

மாரீசன் – திருடனும், அல்சைமர் பயணியும்

Dinesh R சேலம் Published: 14/07/2025 2 நிமிட வாசிப்பு Updated: 15/07/2025 Trailer
எழுத்து அளவு:

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தென்னிந்தியத் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு, பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் ‘மாரீசன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில், வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராகப் பணியாற்றியுள்ள ‘மாரீசன்’ திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, ‘ஃபைவ் ஸ்டார்’ கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தைக் கவனித்திருக்கிறார். கிராமியப் பின்னணியிலான பயண த்ரில்லராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருக்கிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தத் திரைப்படம் ஜூலை 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசருக்குக் கிடைத்த வரவேற்பை விட ட்ரெய்லருக்கு அனைத்துத் தரப்பு ரசிகர்களிடத்தில் இருந்து பெரும் பேராதரவு கிடைத்து வருகிறது.

மாமன்னன் படத்திற்குப் பிறகு வடிவேலு, பகத் பாசில் கூட்டணி இணைந்திருப்பதாலும், இந்தப் படத்திற்கான ட்ரெய்லரில் சிறிய அளவில் திருட்டுகளில் ஈடுபடும் ஒருவனுக்கும், அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கும் இடையேயான மறக்க இயலாத பயணம் தொடர்பான காட்சிகள் இடம் பிடித்திருப்பதாலும், பார்வையாளர்களிடத்தில் இயல்பானதொரு ஆர்வம் எழுந்திருக்கிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.