32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“மெட்ராஸ் என் ஜென்ம பூமி” – நந்தமூரி பாலகிருஷ்ணா | Akhanda 2

Dinesh R சேலம் Published: 03/12/2025 2 நிமிட வாசிப்பு Updated: 08/12/2025 சினிமா
எழுத்து அளவு:
“மெட்ராஸ் என் ஜென்ம பூமி; தெலுங்கானா என் கர்ம பூமி; ஆந்திரா என் ஆத்ம பூமி.”
– பாலய்யா

தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், அகண்டா 2: தாண்டவம் படத்தின் தெலுங்குப் பதிப்போடு இணைந்து தமிழ்ப் பதிப்பும் வரும் டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ்ப் பதிப்பின் வெளியீட்டை ஒட்டிப் படக்குழுவினர் சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நந்தமூரி பாலகிருஷ்ணா, “அகண்டா முதல் பாகம் வெளிவந்த போது இப்படம் பார்க்க ஆள் வருமா என நினைத்தோம். ஆனால் இம்மாதிரி படம் ரசிகர்களுக்குக் கண்டிப்பாகத் தர வேண்டும் என உருவாக்கினோம். அது சூப்பர் ஹிட்டானது. இம்மாதிரி படங்களை ரசிகர்கள் பார்க்கிறார்கள் என தைரியம் வந்தது, போயபாடி ஶ்ரீனுவுடன் எனக்கு நாலாவது படம். எல்லாமே சூப்பர் ஹிட். அவருடன் கதை கூட அவ்வளவாக விவாதிக்க மாட்டேன். இந்தப் படம் 130 நாட்களில் முடிந்த விட்டது. இது சீக்குவல் இல்லை, இது இந்துத் தர்மத்தை, கலாச்சாரத்தைப் போற்றும் ஒரு படைப்பு. நம் இனத்திற்கும் கலாச்சாரத்திற்குமான வெற்றி. நம் பண்பாடுகளை, சனாதான தர்மத்தை இந்தத் தலைமுறை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு இந்தப் படம். சனாதான தர்மத்தைச் சக்தியை இந்தப் படத்தில் காட்டியுள்ளோம். தர்மத்திற்காக நாம் போராட வேண்டும். என் அப்பா தான் என் தெய்வம் அவர் எல்லா வகையிலும் படம் செய்துவிட்டார், நான் ரொம்ப அதிர்ஷடசாலி. நான் திரைக்கு வந்து 50 வருடமாகிவிட்டது. அவர்கள் ஆசியில் இன்னும் ஹீரோவாக நடிக்கிறேன். 4 படம் தொடர் வெற்றி. ரசிகர்கள் இம்மாதிரி படங்களுக்குக் காத்திருக்கிறார்கள்” என்றார்.

நடிகர்கள்:-

நந்தமூரி பாலகிருஷ்ணா
சம்யுக்தா
ஆதிப் பினிசெட்டி
ஹர்ஷாலி மால்ஹோத்ரா

தொழில்நுட்பக் குழு:-

எழுத்து இயக்கம் – போயபாடி ஶ்ரீனு
தயாரிப்பாளர்கள் – ராம் ஆசம்டா, கோபிசந்த் ஆசம்டா
பேனர் – 14 ரீல்ஸ் ப்ளஸ்
வழங்குபவர் – M. தேஜஸ்வினி நந்தமூரி
இசை – S. தமன்
ஒளிப்பதிவு – C. ராம்பிரசாத், சந்தோஷ் D டெடாகே
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் – கோடி பருச்சுரி
கலை – A.S. பிரகாஷ்
படத்தொகுப்பு – தம்மிராஜு
சண்டை அமைப்பு – ராம் – லக்ஷ்மன்
மக்கள் தொடர்பு – யுவராஜ்
மார்க்கெட்டிங் – ஃபர்ஸ்ட் ஷோ

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.