Shadow

பூனைக்குள் ஆவி – மியாவ்

வின்செண்ட் அடைக்கலராஜ்

“பூனையைப் பிரதான கதாபாத்திரமாகக் கொண்டு இந்திய அளவில் எடுக்கப்பட்டிருக்கும் முதற்படம் இது தான்” எனப் பெருமிதப்படுகிறார் ‘மியாவ்’ படத்தின் இயக்குநர் சின்னாஸ் பழனிச்சாமி. இவரொரு விளம்பரப் பட இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பெண்ணைச் சீரழித்து விடுகின்றனர் இளைஞர்கள் சிலர். அந்தப் இளம்பெண்ணின் ஆவி பூனைக்குள் புகுந்து கொண்டு அவர்கள் அனைவரையும் பழி வாங்குகிறது. அவ்விளைஞர்கள் ஒவ்வொருவரையும், புதுப் புது விதமாகப் பழி வாங்குவதுதான் படத்தின் சுவாரசியம் என்கின்றனர். ஹரார் படம் தான் என்றாலும், குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் எடுக்கப்பட்ட காமிக்கல் ஃபேண்டசி படம் என்பதே பொருந்தும் எங்கின்றனர் படக்குழு.

மேலே படத்திலுள்ள பெர்ஷியன் பூனை தான் படத்தின் ஹீரோ. கிராஃபிக்ஸில் பூனை நடனம் ஆடுகிறது; அதுவும் டூயட். இந்தப் பூனையைத் துரத்த நினைக்கும் காவல்துறையினரைப் படாதபாடுப்படுத்துகிறது. ரமேஷ் ஆச்சார்யா என்பவர் சி-ஜி (CG) செய்துள்ளார்.

‘குளோபல் வுட்ஸ் மூவிஸ்’ சார்பில் வின்செண்ட் அடைக்கலராஜ் தயாரித்துள்ளார். சத்யஜித் ரே எழுதிய கடைசி திரைக்கதையை அவரது மகன் சந்தீப் ரே இயக்க, வின்செண்ட் அடைக்கலராஜ் தான் தயாரித்துள்ளார். நீண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் திரைத்துறைக்குள் வந்துள்ளார். புதுமுகங்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டுமென விரும்பி, படத்தில் பிரதான பாத்திரங்களில் நடிப்பவர்கள் அனைவரையும் அறிமுகம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வின்செண்ட்டின் ‘ப்ளாக்-தண்டர்’ தீம் பார்க்காக விளம்பரம் இயக்கியதன் மூலமே, இயக்குநர் சின்னாஸ் பழனிச்சாமிக்கு இவர் அறிமுகமாகி, அந்த நட்பு இன்று மியாவாகி சினிமா ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது.