32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

மின்னல் முரளி விமர்சனம்

Dinesh R சேலம் Published: 05/01/2022 2 நிமிட வாசிப்பு Updated: 29/08/2022 OTT
எழுத்து அளவு:

இந்தியாவிற்கு சூப்பர் ஹீரோ தேவையா?

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

எழுநூறு வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்கிற முக்கோண கிரக அமைப்பில் ஏற்படும் மின்னல் தாக்கி, குறுக்கன்மூலா எனும் கிராமத்தில் இருக்கும் ஜெய்ஸன் வர்கீஸ், ஷிபு ஆகிய இருவருக்கு சில அதிசய சக்திகள் கிடைக்கின்றன. குறுக்கன்மூலா கிராமத்திற்கு அதனால் என்ன பாதிப்புகள் நேருகின்றன என்பதே பட்த்தின் கதை.

எதார்த்த படங்களுக்குப் பெயர் போனது மல்லுவுட். அங்கிருந்து ஒரு சூப்பர் ஹீரோ படமென்பதே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தங்களது பாணியில் இருந்து பெரிதும் விளங்காமல் சூப்பர் ஹீரோ படத்தைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவைப் போல் உலகையே அழிக்கத் துடிக்கும் வில்லன்கள் இல்லாத கிராமத்தில் யார் வில்லன்? சக்தி கிடைத்த இருவரில் ஒருவர் வில்லன், மற்றொருவர் ஹீரோ என்று சேஃப் ஜோன்க்குள் கதையைக் கட்டமைத்துள்ளனர்.

மனித மனம் மிகவும் சிக்கலானது. கிராமத்தையே அழிக்க நினைக்கும் ஷிபுவிற்கு, அதற்கான நியாயமான காரணங்கள் உள்ளன. அந்த ஊரார் அவரை நடத்தும் விதமும், ஒரு சின்ன நம்பிக்கைக் கீற்று அவர் வாழ்வில் வீசத் தொடங்கும் போதே அதைப் பொசுக்கிவிடுவதும், ஷிபுவிற்கு அக்கிராமத்தினர் மீது வன்மமாக மாறுகிறது. மலையாளப் படமான ஜல்லிக்கட்டு போலவே, தனி நபரை விட, ஆபத்தானவர்கள் கூட்டமாக ஒன்றிணையும் மக்களே என்பதை இப்படமும் ஆழமாக வலியுறுத்துகிறது. மனிதன் தன்னை அச்சுறுத்தும் வித்தியாசமான எது ஒன்றினையும், முதலில் வெறுக்கவே தொடங்குகிறான். ஷிபுவின் மீது மக்களின் கூட்டுக் கோபம் அப்படியான ஒன்றே!

அமெரிக்கா செல்லத் துடிக்கும் ஸ்டைலான ஜெய்ஸன் வர்கீஸாகப் பிரமாதமாக நடித்துள்ளார் டொவினோ தாமஸ். உதாசீனத்தைச் சுமக்கும் ஷிபு பாத்திரத்திற்கு உயிரினை அளித்துள்ளார் குரு சோமசுந்தரம். விஷுவல் எஃபெக்ட்ஸ்களைப் பெரிதும் நம்பாமல், கதையினையும் நடிப்பினையும் நம்பி சூப்பர் ஹீரோ படத்தினை உருவாக்கியுள்ளனர்.

இந்தப் படத்தின் க்ளைமேக்ஸிற்காகக் கட்டப்பட்ட சர்ச் (Church) –ஐ, வலதுசாரி அமைப்புகளான அந்தராஷ்ட்ரா ஹிந்து பரிஷத்தும், பஜ்ரங் தளும் இடித்துள்ளனர். பிரிவினையைத் தூண்டும் அடிப்படைவாதிகள் மிகும் காலத்தில், அவர்களிடம் இருந்து காப்பாற்ற சூப்பர் ஹீரோக்களின் தேவை அவசியமாகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.