32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சுந்தர்.சி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’

Dinesh R சேலம் Published: 16/09/2024 1 நிமிட வாசிப்பு Updated: 18/09/2024 Movie Posters
எழுத்து அளவு:

தமிழ்த் திரையுலகின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ எனும் திரைப்படத்தை நட்சத்திர இயக்குநர் சுந்தர். சி இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அரண்மனை 4’ படத்தைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’ படம் உருவாகிறது. தமிழ்த் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா முதன்மையான வேடத்தில் நடிக்கும் இந்தத் திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் ரசிகர்களுக்கு திரையரங்குகளில் புதுவிதமான அனுபவத்தை வழங்குவதற்காக படக்குழுவினர் தெளிவாகத் திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்கள். டிவைன் ஃபேண்டஸி ஜானரில் உருவாகும் இந்தத் திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அஸோஸியேட் ஆகிறது. மேலும் ஐ வி ஓய் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் இஷான் சக்சேனா, சுனில் ஷா மற்றும் ராஜா சுப்பிரமணியன் தலைமையிலான பி ஃபோர் யூ மோஷன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணை தயாரிப்பாகப் பங்களிப்பு செய்கிறது. இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும், இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.