32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் – ட்ரெய்லர்

Dinesh R சேலம் Published: 14/08/2024 1 நிமிட வாசிப்பு OTT
எழுத்து அளவு:

சத்யராஜ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ எனும் இணைய தொடரின் ட்ரெய்லரை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியிட்டது. இந்தத் தொடர் தவரும் ஆகஸ்ட் 16 முதல், ஒளிபரப்படுமென அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது டிஸ்னி+ ஹாட்ஸ்டார்.

‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ தொடர், வித்தியாசமான திரைக்கதையுடன், அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய பொழுதுபோக்கு படைப்பாக உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகியிருக்கும் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ தொடர், எல்லா வயதினரும் ரசிக்கக் கூடிய உணர்வுப்பூர்வமான ரொமாண்டிக் காமெடி சீரிஸாக இருக்கும்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இயக்குநர் தாமிரா இயக்கியுள்ள, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸிற்கு, பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் எடிட்டிங் பணிகளைப் பார்த்தசாரதி செய்துள்ளார். இந்த சீரிஸினை தயாரிப்பாளர் முகமது ரசித் தயாரித்துள்ளார்.

நடிகர் சத்யராஜுடன் பழம்பெரும் நடிகைகள் சீதா மற்றும் ரேகா ஆகியோர் நடிக்கும் இந்த வெப் சீரிஸிற்கு, மெல்லிசை மன்னர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார். முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் இந்த சீரிஸில், நடிகர்கள் வர்ஷா பொல்லம்மா, ரக்ஷன், லிவிங்ஸ்டன், அஜீத் காலிக், கிருத்திகா மனோகர், ராகவி மற்றும் ரேஷ்மா பசுபால்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.