THREE IS A COMPANY என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நானும் சிங்கிள் தான்’. தினேஷ் கதாநாயகனாகவும், கதாநாயகியாக தீப்தி திவேஸும் நடித்துள்ளார். மேலும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சென்னை மற்றும் லண்டன், ஐரோப்பா போன்ற இடங்களில்
படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
“இது முழுக்க முழுக்க காதல் கலந்த கமர்ஷியல் படம். வித்தியாசமான திரைக்கதை அமைத்துள்ளார் அறிமுக இயக்குநர் கோபி. ஒரு புது மாதிரியான கிளைமாக்ஸ் காட்சி இந்தப் படத்தில் உள்ளது. அது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக நிச்சயம் இருக்கும். லண்டனில் இருக்கும் தமிழ் டான் கதாபாத்திரத்தில் நடித்து மொட்ட ராஜேந்திரன் காமெடியில் கலக்கி இருக்கிறார். இந்தப் படம் ரசிகர்களுக்கு அருமையான காமெடி விருந்தாக இருக்கும். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் முதல் வாரத்தில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது” என்றார் தயாரிப்பாளர் ஜெயகுமார்.
>> தயாரிப்பு – THREE IS A COMPANY
>> இணை தயாரிப்பு – ஜெயகுமார், புன்னகை பூ கீதா
>> கதை திரைக்கதை வசனம் இயக்கம் – கோபி
>> ஒளிப்பதிவு – டேவிட் ஆனந்த்ராஜ்
>> இசை – ஹித்தேஷ் மஞ்சுநாத் ( இவர் A.R.ரகுமானிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்)
>> பாடல் – கபிலன் வைரமுத்து
>> சண்டை – கனல் கண்ணன்
>> கலை – ஆண்டனி ஜோசப்
>> படத்தொகுப்பு – ஆதித்யன்
>> நடனம் – அபீப் உஷேன்
>> மக்கள் தொடர்பு – மெளனம் ரவி