Shadow

பிழை விமர்சனம்

pizhai-movie-review

குழந்தைகளை மையப்படுத்தி வரும் படங்களில், கதையினூடாக மறைமுகமாகவோ, நேராகவோ பாடம் புகட்டுதலும் இருக்கும். பிழை படமும் அப்படியான ஒரு முயற்சி தான். ஆனால் பிழை ஒரு நல்ல பாடத்தைத் தாங்கி வந்திருந்தாலும் ஒரு நல்லபடமாக உருபெற சற்றே திணறுகிறது.

வறுமையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களுக்கு கல்வி என்பது கசப்பாக இருக்கிறது. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால், அக்குழந்தை மாணவர்கள் மட்டம் தட்டப்படுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் அவர்கள் வீட்டுக்குத் தெரியாமல் சென்னை வர, அதன் பின் அவர்களுக்கு என்னானது என்பது தான் படத்தின் கதை. படத்தில் நடித்துள்ளவர்கள் எல்லாரும் சிறப்பாகவே நடித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கான பின்கதை ரைட்டிங் மிகவும் பின் தங்கி இருப்பதால், ஒரு கட்டத்திற்கு மேல் பார்வையாளர்களின் பொறுமையை மிகவுமே சோதித்து விடுகின்றனர்.

படிக்காமல் தனது உழைப்பால் முன்னேறியவர்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு கண்மூடித்தனமாக வாழ்வைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது என்று சொன்ன ஒரு விசயம் படத்தில் ஈர்க்கக்கூடிய அம்சம். ஆரம்பக் கல்வி மட்டுமே பயின்று முதல்வர் ஆன காமராஜர் கூட, கல்வியைத் தான் வலியுறுத்தினார். கல்வி என்பது எவ்வளவு அவசியம் என்பதை அசுவாரசியமாகச் சொன்னாலும் சொன்னதற்காகப் பாராட்டலாம்.

– ஜெகன் சேட்