32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

கிழக்கு கடற்கரை சாலையில் – 10 திரைகளுடன் பிவிஆர் சினிமாஸ்

Dinesh R சேலம் Published: 18/06/2019 3 நிமிட வாசிப்பு Updated: 24/06/2019 சினிமா
எழுத்து அளவு:

PVR---ECR

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உயர்தர திரையரங்கு நிறுவனமான பிவிஆர் சினிமாஸ் உத்தண்டியில் உள்ள ஒரு மாலில் அதன் 10 திரைகள் கொண்ட ஒரு புதிய மல்டிப்ளெக்ஸைத் திறந்திருக்கிறது. வாடிக்கையாளர் மைய அணுகுமுறையின் விரிவாக்கமாக, இந்தப் புதிய மல்டிப்ளெக்ஸில் குழந்தைகளுக்கென்றே பிரத்தியேகமாக PVR Play House என்ற ஒரு புதிய திரையரங்கை வடிவமைத்திருக்கிறது. சிறந்த தொழில்நுட்பம் மற்றும் நவீன வசதிகள் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இதுவரை கண்டிராத ஆடம்பர அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த மல்டிப்ளெக்ஸ். இந்த மல்டிப்ளெக்ஸ் உடன் சேர்த்து தமிழ்நாட்டில் 13 இடங்களில் 83 திரைகளும், தென்னிந்தியாவில் 43 இடங்களில் 268 திரைகளும் கொண்டு பிவிஆர் முதன்மையாக விளங்குகிறது. அழகிய கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இந்த மல்டிப்ளெக்ஸ் 51,682 சதுர அடி பரப்பளவில் 1400 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், BARCO 2K ப்ரொஜக்ஷன் சிஸ்டம், டால்பி 7.1 சரவுண்ட் சவுண்ட் மற்றும் அடுத்த தலைமுறை 3D டெக்னாலஜி ஆகியவற்றை நிறுவியிருப்பதன் மூலம் சிறப்பான காட்சிகள் மற்றும் சக்தி வாய்ந்த ஒலி அனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்த மல்டிப்ளெக்ஸ் குறித்து PVR லிமிடெட் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் திரு.சஞ்சீவ்குமார் கூறும்போது, “இந்தப் புதிய மல்டிப்ளெக்ஸ், பிவிஆரின் தனித்துவமான சேவையை நிறைய இடங்களுக்கு எடுத்துச் செல்லும் எங்கள் வியாபார நோக்கத்துடன் பொருந்துகிறது. சென்னை எங்களுக்கு ஒரு முக்கியமான பகுதி. சினிமா அனுபவத்திற்கான புதிய தரநிலைகளை அமைப்பதன் மூலம் தென்னிந்திய சந்தையில் எங்கள் உறுதியான இடத்தை நிரூபிக்க எதிர்நோக்கி இருக்கிறோம்” என்றார்.

மேலும், பிவிஆர் சினிமாவின் தலைமை நிர்வாகி திரு. கௌதம் தத்தா கூறும்போது, “சென்னைவின் அழகிய புறநகர் பகுதியில் எங்களின் புதிய 10 திரைகள் கொண்ட மல்டிப்ளெக்ஸை அறிமுகப்படுத்தியிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் புதிய மல்டிப்ளெக்ஸ் குழந்தைகளுக்கான வரப்பிரசாதம். பிவிஆர் ப்ளேஹவுஸ் மூலம் மேம்பட்ட சினிமா அனுபவத்தை வழங்குவதில் மகிழ்கிறோம். சமகால வடிவமைப்புகள் மற்றும் மெய்சிலிர்க்கும் அழகியலால், இந்த மல்டிப்ளெக்ஸ் இந்தப் பகுதியில் தரத்தில் உயர்ந்து நிற்கிறது. மேலும் பார்வையாளர்கள் அதை அனுபவிப்பதைப் பார்க்க நாங்கள் உற்சாகமாக உள்ளோம்” என்றார்.

Interlocking Panache என்ற கருத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மல்டிப்ளெக்ஸ் பிரகாசமான மற்றும் அதிநவீன தோற்றத்தை வழங்குகிறது. கூடுதலாக, விரைவு டிக்கட் வசதி மற்றும் விரும்பத்தக்க உணவு மெனு ஆகியவை இதன் தனித்துவமான அம்சங்கள். பிவிஆர் பரிசு அட்டைகள் உபயோகிக்கும் வசதியையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளனர். மேலும், பிவிஆர் உறுப்பினராக இணைந்து கொள்ளும் வசதியும் உள்ளது. இந்த மல்டிப்ளெக்ஸ் உடன், தற்போது பிவிஆர் 67 நகரங்களில் 166 இடங்களில் 781 திரைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.

பிவிஆர் சினிமாஸ் இந்தியாவின் மிகப்பெரிய திரையரங்கு நிறுவனம், 1997இல் துவங்கப்பட்டதில் இருந்து தங்களின் தனித்துவமான அம்சங்களால் தங்கள் பிராண்டை மறு வரையறை செய்வதோடு, ஆண்டுக்கு 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களுக்குச் சிறப்பான அனுபவத்தை வழங்கி வருகிறது. இதில் பல வகையான திரைகளையும் கொண்டுள்ளது. Director’s Cut 4 திரைகள், Gold 33 திரைகள், IMAX 8 திரைகள், 4DX 15 திரைகள், P[XL] 7 திரைகள், Playhouse 9 திரைகள் மற்றும் PVR Onyx ஒரு திரையையும் கொண்டுள்ளது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.