32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

Zee 5 இல் ரகு தாத்தா | செப்டம்பர் 13 முதல்

Dinesh R சேலம் Published: 09/09/2024 2 நிமிட வாசிப்பு Updated: 10/09/2024 OTT
எழுத்து அளவு:

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ரகு தாத்தா திரைப்படம், இந்தித் திணிப்பு மற்றும் ஆணாதிக்கத்தைப் பற்றிப் பேசும் படைப்பாகும். சுமன் குமார் இயக்கத்தில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரகுதாத்தா, ZEE5 இல், செப்டம்பர் 13 , 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது. ரகு தாத்தா தமிழிலும், தெலுங்கிலும், கன்னடத்திலும் காணக் கிடைக்கும்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நடிகை கீர்த்தி சுரேஷ், “பெண் சுதந்திரத்தை நம்பும் கயல்விழியின் கதாபாத்திரத்தில் நடித்த ‘ரகுதாத்தா’ திரைப்படம் என் மனதுக்கு நெருக்கமான சிறப்பான பயணமாக அமைந்தது. இயக்குநரின் கதையை உயிர்ப்பிப்பது சவாலாக இருந்தது. உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் இந்த அட்டகாசமான கதையை ஜீ5 இல் காண உள்ளதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இது நாங்கள் எடுத்துக் கொண்ட கருவினைச் சுற்றி அர்த்தமுள்ள உரையாடல்களைத் தொடர்ந்து தூண்டும் என்று நம்புகிறேன்” என்றார்.

ஹோம்பாலே பிலிம்ஸின் நிறுவனர் விஜய் கிரகந்தூர், “ரகுதாத்தா’வின் உலக டிஜிட்டல் பிரீமியர் காட்சிக்காக ஜீ5 உடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ஜீ5-இன் விரிவான ரசிகர்கள் களம் மற்றும் உணர்வுப்பூர்வமான திரைப்படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சாதனை, எங்கள் நோக்கத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறது. ‘ரகுதாத்தா’ எங்கள் தயாரிப்பில் மிக முக்கியமான திரைப்படமாகும். ஏனெனில் இது முக்கியமான சமூகப் பிரச்சினைகளை உணர்ச்சிப்பூர்வமாகவும், அதே நேரத்தில் நகைச்சுவையுடனும் உரையாடுகிறது. மேலும் ஜீ5 மூலம் உலகம் முழுவதும் வாழும் ரசிகர்கள் ‘ரகுதாத்தா’ படத்தைக் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்” என்றார்.

‘ரகுதாத்தா’ படத்தின் இயக்குநர் சுமன் குமார், “ரகு தாத்தா படத்தை உருவாக்கியது ஒரு அழகான பயணம். இந்தத் திரைப்படம் மொழி அரசியல் மற்றும் பாலினப் பாகுபாடுகள் குறித்து பார்வையாளர்களிடையே அர்த்தமுள்ள உரையாடல்களை ஏற்படுத்தியது மிக மகிழ்ச்சியைத் தந்தது. தமிழ்செல்வனாக நடித்துள்ள ரவீந்திர விஜய் உட்பட ஒட்டுமொத்த நடிகர்களும், தாங்கள் ஏற்ற கதாபாத்திரங்களை நம்பகத்தன்மையுடையதாக மாற்றுவதில் தங்கள் முழு உழைப்பை வழங்கினர். ஜீ5 இல் இப்படத்தை உலகம் முழுக்க உள்ள ரசிகர்கள் கண்டுகளிக்க உள்ளதை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.