32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ராம்சரணனின் கம்பீரமான புதுத் தோற்றம் | Peddi

Dinesh R சேலம் Published: 21/07/2025 3 நிமிட வாசிப்பு Updated: 23/07/2025 அயல் சினிமா
எழுத்து அளவு:

குளோபல் ஸ்டார் ராம்சரண் நடித்து வரும் ‘பெடி (Peddi)’ படத்திற்காக நாளை முதல் தொடங்கும் நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நம்ப முடியாத வகையில் அவரது தோற்றமும், ஒப்பனையும் மாற்றி அமைத்துக் கொண்டு தோன்றும் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது.

ராம்சரண் தற்போது நடித்து வரும் இலட்சிய படமான ‘பெடி (Peddi)’ திரைப்படத்திற்காக ஒப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்தத் திரைப்படம், இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே இந்தத் திரைப்படத்தின் வீடியோ கிளிம்ப்ஸ் நாடு முழுவதும் அனைத்து மொழிகளிலும் பெரும் உற்சாகத்தைத் தூண்டியுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இப்படத்தின் முக்கியமான மற்றும் நீண்ட நாட்கள் கொண்ட படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக, இந்தக் கதாபாத்திரத்திற்காக வடிவமைக்கப்பட்ட சக்தி வாய்ந்த புதிய அவதாரத்தை வெளிப்படுத்த ராம் சரண் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் தன்னைத் தயார்ப்படுத்தி வருகிறார். அதற்காக அவர் இடைவிடாத பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அவரது கதாபாத்திரம் கோரும் ஆற்றலையும், தீவிரத் தன்மையையும் முழுமையாகப் பிரதிபலிக்கும் வகையில் தன் உடலைச் செதுக்கி இருக்கிறார். இதற்காக அவர் ஜிம்மில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கரடு முரடான தாடி, இறுக்கமாக இழுத்துக் கட்டப்பட்ட கூந்தல், ஒழுக்கமும் மனவுறுதியும் கொண்ட கம்பீரமான உடல் அமைப்பைக் கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது.

ராம் சரணின் பிறந்த நாளான மார்ச் 27 ஆம் தேதியன்று வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது ‘பெடி (Peddi)’ திரைப்படம்.

‘கருநாடக சக்கரவர்த்தி’ சிவராஜ் குமாரின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் அவரது பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. இப்படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். ஜெகபதி பாபு மற்றும் திவ்யேந்து சர்மா ஆகியோர் முக்கியமான துணை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்து வரும் இந்தத் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற மேஸ்ட்ரோ ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். தேசிய விருது பெற்ற எடிட்டர் நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

ராம் சரணின் பிறந்த நாளான மார்ச் 27, 2026 அன்று இப்படத்தின் வெளியீட்டு தேதி என்பதால் படக்குழு அதை நோக்கி விறுவிறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறது.

நடிகர்கள்:-

குளோபல் ஸ்டார் ராம் சரண்
ஜான்வி கபூர்
சிவராஜ் குமார்
ஜெகபதிபாபு
திவ்யேந்து சர்மா

தொழில்நுட்பக் குழு:-

எழுத்து & இயக்கம் – புச்சி பாபு சனா
வழங்குபவர்கள் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் & சுகுமார் ரைட்டிங்ஸ்
தயாரிப்பு நிறுவனம் – விருத்தி சினிமாஸ்
தயாரிப்பாளர் – வெங்கட சதீஷ் கிலாரு
இசை – ஏ.ஆர் . ரஹ்மான்
ஒளிப்பதிவு – ஆர். ரத்னவேலு
தயாரிப்பு வடிவமைப்பு – அவிநாசி கொல்லா
படத்தொகுப்பு – நவின் நூலி
நிர்வாக தயாரிப்பு – வி. ஒய். பிரவீண் குமார்
மார்க்கெட்டிங் – ஃபர்ஸ்ட் ஷோ
மக்கள் தொடர்பு – யுவராஜ்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.