
டோலிவுட்டில் மாஸ் மகாராஜாவாக இருந்து வரும் ரவி தேஜாவின் நடிப்பில் முதன் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது “டைகர் நாகேஸ்வரராவ்” திரைப்படம் . நுபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளார்கள். வம்சி இப்படத்தினை இயக்குகிறார். “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” மற்றும் ”கார்த்திகேயா – 2” படங்களைத் தயாரித்த அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் அபிஷேக் அகர்வால் இப்படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதனாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் தேஜ் நாராயண் அகர்வால் இப்படத்தை வழங்க , மயங்க் சிங்கானியா இணைத் தயாரிப்பாளராக பணியாற்றி உள்ளார். மேலும் இப்படத்தின் க்ளிம்ப்ஸ் ஒரு தனித்துவமான முறையில் அமைந்திருந்ததாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் தீவிரமடைந்து உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வரும் ஆகஸ்ட் 17ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பு குழுவினர் வெளியிட்டிருக்கும் போஸ்டர் ஆகஸ்டு 17ல் டீசர் வெளியாவதை உறுதிபடுத்துவதோடு படத்தில் ரவிதேஜா ஆக்சனில் அதகளம் செய்திருப்பதும் உறுதியாகிறது.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க, ஆர் மதி ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். அவினாஷ் கொல்லா தயாரிப்பை வடிவமைத்துள்ளார். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதியுள்ளார், மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.
நடிகர்கள்: ரவி தேஜா, நூபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ் மற்றும் பலர்
தொழில்நுட்பக் குழு:
எழுத்தாளர், இயக்குனர்: வம்சி
தயாரிப்பாளர்: அபிஷேக் அகர்வால்
பேனர்: அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ்
வழங்குபவர்: தேஜ் நாராயண் அகர்வால்
இணை தயாரிப்பாளர்: மயங்க் சிங்கானியா
வசனம்: ஸ்ரீகாந்த் விசா
இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ் குமார்
DOP: ஆர் மதி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா
PRO : யுவராஜ்