
“ஷரதோத்சவ்” எனும் இலையுதிர்காலத் திருவிழாவைச் சென்னையில் 47 ஆவது ஆண்டாகக் கொண்டாடுகிறது SMCA. நந்தனத்திலுள்ள மந்திரா கார்டனஸில், செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 2 வரை இவ்விழா கோலகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, முதல்முறையாகக் கிராமப்புற வங்காளம் போலவே வடிவமைக்கப்பட்ட குடில்களுக்கு மத்தியில் நவராத்திரியைச் சென்னையில் கொண்டாடுகின்றனர். சக்தியின் தேவி – துர்கா மாதாவை வணங்கித் தொடங்கப் பெறும் இந்த விழா, இசைக் கச்சேரிகள், புகழ்பெற்ற கலைஞர்களின் மேடை அரங்கேற்றங்கள், உணவுத் திருவிழா, பல்வேறு போட்டிகள், குலுக்கல் முறை பரிசுகள் என பிரம்மாண்டமாய் ஐந்து நாட்கள் நிகழ்கின்றன. பல்வேறு சிறப்புமிக்க வணிக அரங்குகளும் நிறுவப்பட்டுள்ளன.
SMCA – நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அன்னதானம், கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆதரவைச் சிறப்பாக வழங்கி வழங்குகிறது. மேலும், சமூகத்தின் விளிம்புநிலை மற்றும் உதவி தேவைப்படும் மக்களுக்குச் சமூக பொருளாதார வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது.
SMCA முன்னெடுக்கும் ஷரதோத்சவில், அனைத்துத் தரப்பு மக்களையும், கலாச்சாரங்களையும், சமூகங்களையும், மாநிலங்களையும் ஒன்றிணைத்து, நட்பு மற்றும் நல்லெண்ணத்தின் பிணைப்பிற்குள் கொண்டுவருகிறது. சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய நாட்களில் 10,000 மக்களுக்கு இலவச உணவை வழங்கவுள்ளது. இந்த நிகழ்வின் மூலமாக, சமூக நலத்திட்டங்களை மேற்கோள்ள SMCA-விற்கு நிதி திரட்டும் முன்னெடுப்பும் செய்யப்படும்.
இந்த விழாவிற்குத் தலைமை விருந்தினர்களாக, மணிப்பூர் மற்றும் திரிபுராவின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி திரு. முரளிதரனும், சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி திரு. செந்தில்குமாரும் கலந்து கொண்டனர். SMCA-வின் தலைவர் கெளஷிக் கங்குலி, செயலாளர் சந்தீப் டே, துண தலைவர்கள் பாஸ்கர் செயினும், டெபஷிஷ் முகர்ஜியும், செயற்குழு உறுப்பினர் பிரபல புற்றுநோய் மருத்துவர் அனிதா ரமேஷும் விழா சிறப்பாக நடைபெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.